ARR: 'அன்று போதையிலிருந்த கிட்டாரிஸ்ட் சொன்ன வார்த்தை...' - ரஹ்மான் சொல்லும் வாழ...
விடாமுயற்சி படத்தின் முதல் பாடல்!
அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாகியிருக்கிறது.
‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
பாடகர் அறிவு எழுதியுள்ள இந்தப் பாடலை அனிருத் ரவிச்சந்தர் இசையில் ஆண்டனி தாசன் பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு கல்யாண் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்படிப்பை முடித்து கார் பந்தயத்திற்கு தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது.