தகாத உறவால் பெண் கழுத்தறுத்துக் கொலை: தொழிலாளி தற்கொலை முயற்சி
Annamalai: 'தமிழ் மரபில் இருக்கிறது' - தன்னை 6 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் பற்றி பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
இதுதொடர்பாக நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``திமுக ஆட்சியை ஒழிக்கும் வரை காலணி அணியப்போது இல்லை” என சபதம் எடுத்தார். மேலும் பேட்டி முடிந்த உடனே தனது காலணிகளை கழற்றினார். மேலும் தன்னை தானே காலையில் சாட்டையால் அடித்து கொள்ள போவதாகவும், விரதமிருந்து முருகனிடம் முறையிட உள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் அண்ணாமலை தன் வீட்டின் முன்பு தன்னை 6 முறை சாட்டையால் அடித்துக் கொண்டிருகிறார். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சாட்டை அடித்துக்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ' பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கின்றன. அவ்வளவு எளிதாக எப்.ஐ.ஆரை பதிவிறக்கம் செய்ய முடியாது.
சிஸ்டமிக் பிரச்னையில் காக்கி உடை மாட்டிக்கொண்டிருக்கிறது. சாட்டையில் அடிப்பது நமது தமிழ் மரபில் இருக்கிறது.அடுத்த தோல்வி வந்தாலும் அதை ஏற்றுகொள்கிறேன். லண்டன் பயனத்திற்கு பிறகு எனது பாதை இன்னும் தெளிவாகி இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.
மேலும், ``திமுக ஆட்சியில் இருக்கும் வரை காலாணியை அணியப் போவதில்லை. தமிழக மக்களுக்காக இந்த வேள்வியை செய்கிறேன். உடலை வருத்தி ஒரு செயலை செய்யும்போது, அதற்கு ஒரு பலன் கிடைக்கும் என்பது நம் தமிழ் மரபு. முருக பெருமாளுக்காக என்னை நானே அடித்துக் கொள்வது என்பது இந்த சமூகத்துக்கானது. இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். நாங்கள் அறவழியில் செல்கிறோம். இது தனி மனித வெறுப்புக்காக இல்லை. ஆண்டவருக்காக சமர்ப்பித்துள்ளோம்.
நான் நேர்மையாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். 2026 தேர்தலில் தோற்றாலும் கவலைப்பட மாட்டேன். மக்களின் மீது நம்பிக்கை வைத்து அரசியல் செய்கிறோம். சேகர் பாபு போல முதல்வரின் காரில் தொற்றி செல்வது மட்டுமே அரசியல் இல்லை. இதை நகைச்சுவையாக பார்ப்பவர்கள் பார்த்து கொள்ளட்டும். எல்லா பதவியும் வெங்காயம் போல உறிக்க உறிக்க ஒன்றுமில்லை. தனிமனித வாழ்க்கை தான் முக்கியம்.
காவல்துறையை எல்லா நேரத்திலும் குறை சொல்ல மாட்டேன் தொழில்நுட்ப கோளாறால் எஃப்ஐஆர் லீக் ஆக வாய்ப்பில்லை. காவல்துறை சுதந்திரமாக செயல்படுவதில்லை." என்றார்.