பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா: பூரிப்பில் அருண் பிரசாத்!
நடிகர் அருண் பிரசாத்தின் காதலியும் முன்னாள் போட்டியாளருமான அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை தந்துள்ளதால் அருண் பிரசாத் பூரிப்படைந்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 12வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் போட்டியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை புரிகின்றனர்.
குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தைச் நேர்ந்த போட்டியாளருக்கு அறிவுரைகளையும், மற்ற போட்டியாளருக்கு தங்களுக்கு ஏற்பட்ட முரண்பாட்டியை தெரிவித்து வருகின்றனர்.
முதல் இரு நாளில் தீபக், ரயான், மஞ்சரி, பவித்ரா உள்ளிட்ட போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்துசென்றனர்.
அந்தவரிசையில் மூன்றாவது நாளான நேற்று (டிச. 26) முத்துக்குமரன், ஜெஃப்ரி, ஜாக்லின் உள்ளிட்ட போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்துசென்றனர்.
இதையும் படிக்க: பிக் பாஸ்: விஷ்ணுவிடம் காதலை வெளிப்படுத்திய செளந்தர்யா!
இன்று(டிச. 27) செளந்தர்யாவின் நண்பர் விஷ்ணு வருகை தந்துள்ளதாக முதல் புரோமோ வெளியான நிலையில், அருண் பிரசாத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், அவரின் காதலி அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.
நடிகை அர்ச்சனா, அருண் பிரசாத்துக்கு அறிவுரைகளை வழங்கி, தனது காதலை வெளிப்படுத்திய நிலையில், சந்தோஷத்தில் அருண் பிரசாத் அர்ச்சனாவை தூக்கி அவருடை அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த புரோமோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனை நடிகை அர்ச்சனா வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.