தமிழ்வழியில் படித்த வி. நாராயணன் இஸ்ரோ தலைவராகப் பொறுப்பேற்பு!
வரம் தரும் வாரம்!
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (டிசம்பர் 13 - 19) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
வழக்குகள் சாதகமாக முடியும். உடன்பிறந்தோரின் ஆதரவும் கிட்டும். தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரிகள் சிறுமுதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகளுக்குப் பாசன வசதிகள் மேம்படும்.
அரசியல்வாதிகளுக்கு மேலிடம் ஆதரவாக இருக்கும். கலைத் துறையினருக்கு ரசிகர்களின் அன்பு மேலோங்கும். பெண்களுக்கு கணவரின் அன்பு அதிகரிக்கும். மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - டிசம்பர் 28,29.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
மதிப்பும் மரியாதையும் உயரும். தொழிலில் புதிய செயல்முறைகளைக் கொண்டுவருவீர்கள். எதிரிகளிடம் விலகியிருப்பீர்கள். உடனிருப்போருக்கு உதவுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு புதிய கௌரவம் கிடைக்கும். கலைத் துறையினர் பிறருக்கு உதவுவீர்கள். பெண்களுக்குப் பொருளாதார நிலை சீராகும். மாணவர்கள் விட்டுக் கொடுத்து சகஜமாகப் பழகுவீர்கள்.
சந்திராஷ்டமம் - டிசம்பர் 30, 31.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
புதிய உற்சாகத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உடனிருப்போர் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். எண்ணங்களுக்குச் செயல்வடிவம் பெருகும்.
உத்தியோஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம், வேலைமாற்றம் அமையும். வியாபாரிகள் தேவையான பொருள்களையே வாங்கி விற்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் பலம் குறையும். கலைத் துறையினருக்கு பண வரவு சீராகும். பெண்கள் கடினமாகப் பேச வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜனவரி 1, 2.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
நன்கு உழைத்து முன்னேறுவீர்கள். சமூகத்தில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். வருமானம் உயரும். விலகியிருந்த உறவினர்கள் குடும்பத்தோடு இணைவார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். விவசாயிகள் கொள்முதலில் நல்ல நிலையை எட்டுவீர்கள்.
அரசியல்வாதிகளை மேலிடம் பாராட்டும். கலைத் துறையினரின் திறமைகள் வெளிப்படும். பெண்கள் மௌனம் காப்பது நல்லது. மாணவர்கள் தேவையான உடற்பயிற்சிகளைக் கற்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
கடின உழைப்புக்குப் பின்னரே வெற்றி தேடி வரும். எவருக்கும் முன்ஜாமீன் போட வேண்டாம். நீண்டநாளைய எண்ணங்கள் நிறைவேறும். பெற்றோரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் குறைவு. வியாபாரிகள் கொடுக்கல் } வாங்கலில் சீரான நிலையைக் காண்பீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்குவீர்கள்.
அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினரை அரவணைத்துச் செல்வீர்கள். பெண்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். மாணவர்களுக்கு விளையாட்டில் கவனம் தேவை.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தடைப்பட்டிருந்த சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத்தில் மழலைப் பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் தங்களது முயற்சிகளைக் கைவிடாமல் உழைப்பீர்கள். வியாபாரிகளுக்குப் பணவரவு இருக்கும். விவசாயிகளின் பயணம் திருப்தியாக இருக்கும்.
அரசியல்வாதிகள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். கலைத் துறையினர் திறமைகளை வளர்த்துகொள்வீர்கள். பெண்கள் குடும்ப ஒற்றுமையைக் காப்பீர்கள். மாணவர்கள் உற்சாகமான நிலையில் இருப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
செயல்பாடுகளில் முக்கிய திருப்பங்கள் உண்டு. ஆசைகளைத் தவிருங்கள். தாமதப்படுத்திய செயல்களைத் துரிதப்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் சுமுகமாகப் பழகுவீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் உண்டாகும்.
அரசியல்வாதிகளின் பேச்சுகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படும். கலைத் துறையினருக்கு பிறர் உதவுவார்கள். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை மேம்படும். மாணவர்கள் புதுத் தெம்புடன் இருப்பார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
தொழிலில் அநாவசியச் செலவுகள் ஏற்படலாம். புதிய தொழில்நுட்பங்களைக் கற்பீர்கள். வருமானம் சிறக்கும். புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். வியாபாரிகள் பழைய கடன்களை வசூலிப்பீர்கள். விவசாயிகளுக்கு பால் வியாபாரத்தில் உபரி வருமானம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு ஆதரவாய் இருப்பீர்கள். கலைத் துறையினரின் திறமைகள் வெளிப்படும். பெண்கள் தாய்வழி உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்கள் தியானம், யோகா கற்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
நெடுநாளாக ஒதுக்கிவைத்திருந்த காரியங்களைச் செய்வீர்கள். பெரியோருக்கு, ஆன்மிக ஈடுபாடு ஏற்படும். நல்ல நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். செல்வாக்கு உயரும்.
உத்தியோகஸ்தர்களை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். வியாபாரிகள் புதிய உத்திகளைப் பயன்படுத்துவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் அரசு அலுவலர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் புதிய படைப்புகளை உருவாக்குவீர்கள். பெண்கள் கணவரின் பாராட்டுகளால் மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
பொருளாதாரம் சிறக்கும். பங்கு வர்த்தகத்தில் வருமானம் கிடைக்கும். எதிர்காலத்துக்காகத் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனக் குழப்பங்கள், எதிர்மறை சிந்தனைகள் மறையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் முக்கிய பதவிகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு அங்கீகாரம் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். மாணவர்கள் விரும்பிய மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
பணவரவு மிகும். உறவினர்களால் சிறு சங்கடங்கள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். உங்கள் காரியங்களை முடித்து விடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. வியாபாரிகள் புதிய முயற்சிகளை யோசித்து செயல்படுவீர்கள். விவசாயிகளுக்கு உற்பத்தி குறையும்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்துடன் இணைந்து காரியமாற்றுவீர்கள். பெண்கள் சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். மாணவர்கள் போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
அதிக லாபத்தை எதிர்பார்க்காமல் செயலாற்றுவீர்கள். காரியங்களைத் தனித்தே செய்துவிடுவீர்கள். தனித்திறன்கள் வெளிப்படும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைத் திட்டமிட்டு செய்வீர்கள். வியாபாரிகளுக்கு சிறிது சிரமங்கள் ஏற்படும். விவசாயிகள் கால்நடைகளால் லாபம் அடைவீர்கள்.
அரசியல்வாதிகள் எந்தப் பிரச்னையையும் சமாளிப்பீர்கள். கலைத் துறையினர் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். பெண்கள் விருந்துகளில் பங்கேற்பீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் சொல் கேட்டு நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - டிசம்பர் 27.