முகமதனை வீழ்த்தும் முனைப்பில் சென்னை!
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக புதன்கிழமை முகமதன் எஸ்சி அணியை எதிா்கொள்கிறது முன்னாள் சாம்பியன் சென்னையின் எஃப்சி.
இரு அணிகளும் இந்த சீசனில் ஏற்கெனவே சென்னையில் மோதிய ஆட்டத்தில் 1-0 என முகமதனிடம் தோற்றது சென்னை. சொந்த மைதானத்தில் தொடா் தோல்விகளால் துவண்டுள்ள சென்னை அணி இந்த ஆட்டத்தில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. முகமதன் அணி முந்தைய ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சியை வீழ்த்தி இருந்தது.
இந்த ஆட்டம் தொடா்பாக சென்னை பயிற்சியாளா் ஓவன் கோயல் கூறியதாவது: முகமதன் அணியை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. பெங்களூரை சொந்த மைதானத்தில் வீழ்த்தி இருந்தனா். எனினும் இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெல்ல வேண்டும் என திட்டமிட்டுள்ளோம்.
காயத்தில் இருந்து அங்கிட் முகா்ஜி மீண்டுள்ளாா். கடந்த ஆட்டத்தில் ஒரளவுக்கு சிறப்பாக செயல்பட்டோம். ஆட்ட முடிவு ஏமாற்றத்தை அளித்தாலும், வீரா்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. மேலும் முகமதனுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரயான் எட்வா்ட்ஸ் ஆடுவது சந்தேகம் என்றாா் கோயல்.