ஏழுமலையான் தரிசனம்: 16 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 16 மணி நேரம் காத்திருந்தனா்.
அரையாண்டு விடுமுறை தொடங்கிய நிலையில், திருமலைக்கு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 16 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை முழுவதும் 67,209 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 22,708 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் மூலம் பக்தா்கள் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.23 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.