பேருந்துக்காக சாலையில் காத்திருந்த கா்ப்பிணி; காரில் அழைத்துச் சென்று வீட்டில் வ...
எம்.டி.யிடம் மகனாக உணர்ந்தேன்: மம்மூட்டி
எழுத்தாளர், திரைக்கதையாசிரியர் எம். டி. வாசுதேவன் நாயர் குறித்து நடிகர் மம்மூட்டி உருக்கமாப் பதிவிட்டுள்ளார்.
புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், ‘ஞானபீடம்’ விருது பெற்ற எம்.டி.வாசுதேவன் நாயா் (91) புதன்கிழமை இரவு காலமானாா்.
எம்.டி.வாசுதேவன் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், மோகன்லால் என அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள், இலக்கியவாதிகள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவரது மறைவுக்கு கேரள அரசு இன்றும் நாளையும் (டிச. 26, 27) 2 நாள்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்! - வாசுதேவன் நாயர் குறித்து கமல்
இதற்கிடையே, எம்.டி. வாசுதேவன் நாயர் குறித்து நடிகர் மம்மூட்டி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “பலரும் என்னை உருவாக்கியவர் எம்டி என கூறுகின்றனர். ஆனால், நானே அவரைத் தேடிச் சென்று என்னைக் கண்டடைந்தேன். எங்களின் முதல் சந்திப்பிலிருந்து நண்பனாக, சகோதரனாக எங்களின் உறவு வளர்ந்துகொண்டே இருந்தது. சில மாதங்களுக்கு எர்ணாகுளத்தில் நடைபெற்ற நிகழ்வில் எம்.டி. என் நெஞ்சில் சாய்ந்துகொண்டார். அந்தக் கணம் என் தந்தையைத் தாங்குவதுபோல் நான் உணர்ந்தேன்.
எம்டியின் மனதில் இடம் பிடித்ததையே என் திரைவாழ்வின் மிகப்பெரிய ஆசியாகக் கருதுகிறேன். அவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள் எல்லாம் இந்த நேரத்தில் என்னைவிட்டு விலகுகின்றன. ஒரு சகாப்தம் மறைந்தது. இப்போது, என் மனம் முழுவதும் காலியாக இருக்கிறது.” என உருக்கமாகத் தன் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் மம்மூட்டியின் நடிப்பில் பெரிய செல்வாக்கைச் செலுத்தியர் எம்டி வாசுதேவன் நாயர். ’மம்மூட்டிக்காக வெவ்வேறு கதாபாத்திரங்களை எழுதி அவரின் நடிப்பாற்றலை வெளிக்கொண்டுவந்தவர் எம்.டி. ’ என திரை விமர்சகர்கள் கருதுகின்றனர்.
நீண்ட காலமாகவே எம்.டி.யின் மிக நெருங்கிய நட்பில் மம்மூட்டி இருந்தார். இருவரின் பிறந்த நாளிலும் அவரவர் வீடுகளில் சந்தித்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.