பாஜக போராட்டம்: தமிழிசை, பாஜக நிர்வாகிகள் கைது
சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து தமிழக பாஜகவினர் வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதால் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநில துணைத்தலைவர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்யதனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து தமிழக பாஜகவினர் வள்ளுவர் கோட்டத்தில் அனுமத இன்றி போராட்டம் நடத்த முயன்றதால் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பாஜக மாநில துணைத்தலைவர் கருணாகராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிக்க |அம்பேத்கரின் நற்பெயரை,புகழை யாராலும் கெடுத்து விட முடியாது: சுப்பிரமணியன் சுவாமி பேட்டி
இதையடுத்து செய்தியாளர்களிடம் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் இதனை கண்டித்து போராட்டம் நடத்த கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும், சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இந்த பாலியல் வன்கொண்டுமையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யக்கூடிய ஆர்வத்தை இதுபோன்ற குற்றங்களை நடைபெறுவதை தடுப்பதற்கு காவல்துறையினர் அக்கறை காட்டவில்லை என்றார் அவர்.