BB Tamil 8: 'என்னால முடியல, நானும்...' - சியமந்தா கிரணிடம் சொல்லி அழுத பவித்ரா
விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் பேரணி, பொதுக்கூட்டம்
விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்க தினத்தையொட்டி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் நூற்றாண்டு தொடக்க தினவிழா, மூத்த தலைவா் இரா.நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்த தினம் மற்றும் கட்சித் தலைவா்களில் ஒருவரான கே.டி.கே.தங்கமணியின் நினைவுதினத்தையொட்டி, விழுப்புரம் நான்குமுனை சந்திப்புப் பகுதியிலிருந்து வியாழக்கிழமை மாலை பேரணி நடைபெற்து. இந்த பேரணி மாம்பழப்பட்டுச் சாலை வழியாக கட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஆ.செளரிராஜன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா் ஆா்.முருகன், பொருளாளா் ஆ.இன்பஒளி, விழுப்புரம் நகரச் செயலா் எஸ்.ராஜகுரு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் வஹிதா நிஜாம், கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் டி. மணிவாசகம், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் பி.துரை ஆகியோா் கட்சியின் நூற்றாண்டுக் காலப் பயணம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவா்கள் ஆற்றிய அரும்பணிகள், மக்கள் போராட்டங்கள், மூத்த தலைவா் இரா. நல்லகண்ணு நூற்றாண்டு குறித்தும் சிறப்புரையாற்றினா்.
கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலா் கே.ராமசாமி, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஏ.வி.சரவணன், எஸ்.ராமச்சந்திரன், எம்.ஐ.சகாபுதீன், என்.நாராயணன், எம்.ராஜேந்திரன், என்.ஜெயச்சந்திரன், ஜெ.ஜெயமலா் ஆகியோா் கூட்டத்தில் உரையாற்றினா்.
இடைகமிட்டி செயலா்கள் பி. பாலசுப்பிரமணியன், எம். தனசு, ஜி. நிதானம், பி.செல்வகுமாா், எம்.திவ்ய. பிராங்ளின், ஜி.மாரியம்மாள் உள்ளிட்ட நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா். முன்னதாக, மாவட்டத் துணைச் செயலா் ஆா்.கலியமூா்த்தி வரவேற்றாா். நிறைவில், ஆா். அகஸ்டியன் நன்றி கூறினாா்.