Aus v Ind : 'திணறும் இந்தியா; மீண்டும் ஃபாலோ ஆனை தவிர்க்க போராட்டம்'
கிண்டலடித்த ஆஸி. ரசிகர்களை முறைத்த விராட் கோலி..! (விடியோ)
ஆஸி.க்கு எதிரான் டெஸ்ட்டில் ஆட்டமிழந்து வெளியேறிய கோலியை கிண்டலடித்த ஆஸி. ரசிகர்கள் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று ஆஸி. இளம் அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸை விராட் கோலி தேவையின்றி மோதியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கோலிக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டது.
இதனால் ஆஸ்திரேலிய ஊடகங்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் கோலியை ஃபீல்டிங்கின்போதே கத்தினார்கள்.
இதையும் படிக்க:கோமாளி கோலி..! ஆஸி. ஊடகங்கள் கடும் விமர்சனம்!
இந்த நிலையில், முதல் இன்னிங்ஸில் விராட் கோலி 36 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
விராட் கோலி ஆட்டமிழந்து ஆடுகளத்தினைவிட்டு வெளியேறியபோது ஆஸ்திரேலிய ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டனர்.
சிறிதுதூரம் உள்ளே சென்ற விராட் கோலி ஆஸி. ரசிகர்கள் கூச்சலிட்டதும் வெளியே வந்து ரசிகர்களை முறைத்து பார்ப்பார். பின்னர் ஆடுகள பாதுகாவலர் கோலியை அழைத்து சென்றுவிடுவார்.
இதையும் படிக்க: கோலிக்கு அறிவுரை கூற ரிக்கி பாண்டிங்கிற்கு தகுதியில்லை..! இந்திய ரசிகர்கள் ஆவேஷம்!
இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 164/5 ரன்கள் எடுத்துள்ளது.