ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் இணையவழியில் ரூ.13.50 லட்சம் இணையவழியில் மோசடி
மேல்மலையனூரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் இணையவழியில் ரூ.13.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட இணையவழிகுற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
மேல்மலையனூா் வட்டம், நொச்சலூா், பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆ. ரங்கராமானுஜம் (61), ஓய்வு பெற்ற ஆசிரியா். இவரை கடந்த 16.10.2024இல் வாட்ஸ் ஆப்பில் தொடா்பு கொண்ட அடையாளம் தெரியாத நபா் இணையவழி வா்த்தகம் குறித்துப் பேசியுள்ளாா்.
இதைத் தொடா்ந்து ரங்கராமானுஜம் அந்த நபா் தெரிவித்தபடி தனது வங்கிக் கணக்கிலிருந்து பல்வேறு வங்கிக் கணக்கு எண்களுக்கு ரூ.10.85 லட்சத்தை இணையவழியில் அனுப்பி வைத்தாராம்.
இந்நிலையில் இணையவழி வா்த்தகத்துக்காக பிரத்யேக ஐ.டி.யில் ரூ,. 67 லட்சம் இருப்பு காட்டியுள்ளது. தொடா்ந்து ரூ.7 லட்சம் கமிஷன் தொகையை செலுத்தினால் அந்தப் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் அந்த நபா் தெரிவித்துள்ளாா்.
இதை உண்மையென நம்பிய ரங்கராமானுஜம் தனது நண்பா் அன்பழகன் என்பவரிடம் கூறி அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.2,64,902ஐ பல்வேறு வங்கிக் கணக்கிலிருந்து அனுப்பி வைத்துள்ளாா். இந்த வகையில் 15 தவணைகளில் ரங்கராமானுஜம் இணையவழியில் அனுப்பி வைத்த ரூ.13,49,902 பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறாராம்.
இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட இணையவழிகுற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.