Career: 10-ம் வகுப்பு முடித்து 'இந்த சான்றிதழ்' இருந்தால் போலீஸ் வேலை- எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
இந்தோ திபெத்தியன் எல்லையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
மோட்டர் மெக்கானிக் பிரிவில் தலைமை கான்ஸ்டபிள் மற்றும் கான்ஸ்டபிள் பணி.
மொத்த காலிப்பணியிடங்கள்: 51
சம்பளம்: தலைமை கான்ஸ்டபிள் ரூ.25,500 - 81,000
கான்ஸ்டபிள் ரூ.21,700 - 69,100.
வயது வரம்பு: 18 - 25
தகுதிகள்: தலைமை கான்ஸ்டபிளுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மோட்டர் மெக்கானிக் துறையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.
கான்ஸ்டபிளுக்கு பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தொழிற்பயிற்சியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் மூன்று ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
எப்படி தேர்வு செய்வார்கள்?
உடல் தகுதித் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, எழுத்துத் தேர்வு, பிராக்டிக்கல் தேர்வு, மருத்துவ பரிசோதனை.
குறிப்பு: ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் மற்றும் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 22, 2025.
விண்ணப்பிக்கும் இணையதளம்:recruitment.itbpolice.nic.in
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.