செய்திகள் :

எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவு: கேரள அரசு 2 நாள் துக்கம் அனுசரிப்பு!

post image

பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவையடுத்து கேரள அரசு இன்றும் நாளையும்(டிச. 26, 27) 2 நாள்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.

புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், ‘ஞானபீடம்’ விருது பெற்ற எம்.டி.வாசுதேவன் நாயா் (91) புதன்கிழமை இரவு காலமானாா். இதய செயலிழப்பு காரணமாக, கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

எம்.டி.வாசுதேவன் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள், இலக்கியவாதிகள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவுக்கு கேரள அரசு இன்றும் நாளையும்(டிச. 26, 27) 2 நாள்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. இன்று நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது சித்தாராவில் உள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று(வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு மாவூர் சாலையில் உள்ள மயானத்தில் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெறுகிறது.

இதையும் படிக்க | 2024 - 'தயாரிப்பாளர்' உதயநிதி Vs 'ஹீரோ' விஜய் என்ட்ரி! - தயாராகும் தமிழக அரசியல்

எம்.டி.வாசுதேவன் நாயா், நவீன மலையாள எழுத்துலகின் முக்கியத் தூண்களில் ஒருவராகத் திகழ்ந்தவா். 1933-ஆம் ஆண்டு பிறந்த அவா் தனது கல்லூரி நாட்களில் முதல் கதைத் தொகுப்பை வெளியிட்டாா். கவிதைகள் எழுதத் தொடங்கி பின்னா், நாவல், சிறுகதை, நாடகம், திரைக்கதை, சிறாா் இலக்கியம், திரைப்பட இயக்கம் என கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக மலையாள படைப்புலகில் ஜாம்பவனாக இருந்தார். ஞானபீட விருது, கேந்திர சாகித்திய அகாதெமி விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

தனது சிறுகதையை அடிப்படையாக்கி அவா் திரைக்கதை எழுதி இயக்கிய ‘நிா்மால்யம்‘ திரைப்படம் தேசிய அளவில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகா் ஆகிய விருதுகளை வென்றது. மத்திய அரசு 2005-இல் அவருக்கு பத்ம பூஷண் விருதளித்து கௌரவித்தது.

டாக்டர் மன்மோகன் சிங் மறைவு: 7 நாள்கள் அரசு துக்கம் அனுசரிப்பு!

புது தில்லி: முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை(டிச. 26) இரவு 10 மணியளவில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.டாக்டர் மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவில... மேலும் பார்க்க

டாக்டர் மன்மோகன் சிங் மறைவு: தலைவர்கள் இரங்கல்!

புது தில்லி: முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை(டிச. 26) இரவு 10 மணியளவில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார். அன்னாரது இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை(டிச.27) நடை... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் காலமானார்!

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. 1991 - 96 வரை முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான ஆட்சியில், நிதித் துறை அம... மேலும் பார்க்க

எய்ம்ஸ் விரைந்த காங். தலைவர்கள்! மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிப்பு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பார்ப்பதற்காக காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், எய்ம்ஸ் ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் விசாரணை கைதி மர்ம மரணம்!

மத்தியப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் விசாரணை கைதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேசத்தில் மகேந்திர பிரஜாபத் (24) என்பவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கை... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பார்க்க