செய்திகள் :

'ஸ்டாலினே முழு பொறுப்பு!' - பாலியல் தொந்தரவு வழக்கில் மாணவி பெயர் வெளியானதற்கு அண்ணாமலை கண்டனம்

post image

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒரு பாலியல் தொந்தரவுக்கு உள்ளான தகவல் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று மாணவியின் பெயர் எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும், அந்த எப்.ஐ.ஆர் இணையத்தில் வெளியானது என்றும் தகவல்கள் பரவியது.

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...

"சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தச் சென்ற, முன்னாள் ஆளுநர் திருமதி. தமிழிசை சௌந்தராஜன், மாநிலத் துணைத் தலைவர் திரு. கருநாகராஜன், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகளை, வலுக்கட்டாயமாகக் கைது செய்திருக்கிறது காவல்துறை.

குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டிருக்கிறார்கள். ஒரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து தவறியிருக்கிறது திமுக. இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடும் ஆகும். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் முழு பொறுப்பு.

திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்க, இத்தனை கீழ்த்தரமான, மனசாட்சியற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலினையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியிருப்பதற்கு வெட்கப்படுங்கள் ஸ்டாலின். #ShameOnYouStalin" என்று பதிவிட்டுள்ளார்.

Manmohan Singh : 'அவர் குறைவாகப் பேசினார், மிகுதியாக சாதித்தார்' - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அவருக்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களின் இரங்கலை வெளிப்படுத்தி வருகின்றனர... மேலும் பார்க்க

Manmohan Singh: 'அவர் பிரதமராக இருந்த போது அடிக்கடி பேசுவேன்' - இரங்கல் பதிவில் நினைவு கூர்ந்த மோடி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அவருக்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களின் இரங்கலை வெளிப்படுத்தி வருகின்றனர... மேலும் பார்க்க

Manmohan Singh: `மறைந்தார் மன்மோகன் சிங்' - பிரதமர் மோடி இரங்கல் | Live

பிரதமர் மோடி இரங்கல்Dr. Manmohan Singh Ji and I interacted regularly when he was PM and I was the CM of Gujarat. We would have extensive deliberations on various subjects relating to governance. His w... மேலும் பார்க்க

Manmohan Singh: `சுய நினைவை இழந்த மன்மோகன் சிங்; இறப்புக்கு காரணம் என்ன?' - மருத்துவமனை அறிக்கை!

இந்தியாவின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் 92 வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். டெல்லி எய்ம்ஸில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சொல்... மேலும் பார்க்க

'இனி வெறுங்கால் தான்' ; புதிதாக வாங்கப்பட்ட கோயில் சாட்டை - அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு ஹைலைட்ஸ்

கோவை தனியார் ஹோட்டலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஒரு துயரமான நேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கிறோம். சில நேரத்தில் நாம் எதற்காக அரசியலில் இ... மேலும் பார்க்க