‘பரிசுத்த காதல்..’ ஒரு கோடி பார்வைகளைக் கடந்த ரெட்ரோ டீசர்!
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் டீசர் ஒரு கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
சூர்யா - 44 என நீண்ட நாள்களாக அழைக்கப்பட்டு வந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் - நடிகர் சூர்யா கூட்டணி திரைப்படத்தின் பெயர் டீசரை நேற்று (டிச. 25) வெளியிட்டனர்.
ஆக்சன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ரெட்ரோ எனப் பெயரிட்டுள்ளனர். இதில், பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: ரஜினிகாந்த், சிவகார்த்திகேயனிடம் வாழ்த்து பெற்ற குகேஷ்!
இப்படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் பெயர் டீசர் யூடியூபில் ஒரு கோடி (10 மில்லியன்) பார்வைகளைக் கடந்துள்ளது.
டீசர் பிடித்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.