அமித் ஷா தமிழகம் வருகை ஒத்திவைப்பு?
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழகப் பயணம் ஒத்திவைக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டிச. 27ஆம் தேதி அமித் ஷா தமிழகம் வருவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவரின் பயணம் ஒத்திவைக்கப்படலாம் என்றும், ஜனவரி முதல் வாரத்தில் தமிழகத்துக்கு வருவார் என்றும் கூறப்படுகிறது.
விமானம் மூலமாக டிச. 27ஆம் தேதி தில்லியிலிருந்து சென்னை வரும் அமித் ஷா, ஹெலிகாப்டர் மூலமாக திருவண்ணாமலை சென்று, டிச. 28 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தைத் திறந்துவைக்கிறார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், அமித் ஷாவின் தமிழகப் பயணம் ஒத்திவைக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மேலூர் விவசாயிகள் அடுத்தக்கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
ஜன. 7ஆம் தேதி மேலூரில் கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக மேலூர் ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.