செய்திகள் :

புலித்தோல் கடத்திய 11 பேர் கைது!

post image

ஒடிசா மாநிலத்தில் புலித்தோல் கடத்திய 11 பேரை பாலசோர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பாலசோர் மாவட்டம் சோரோ நகரில் புலித்தோல் கடத்திய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடமிருந்து ஒரு புலித்தோலும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாலசோர் வனத்துறை அதிகாரி குஷ்வந்த் சிங் கூறுகையில், வனவிலங்குகளின் பாகங்கள் சந்திப்பூர் காட்டுப்பகுதியில் விற்கப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தாகவும், அதன் அடிப்படையில் பாலசோர் மற்றும் மயூர்பஞ்சு ஆகிய இரு மாவட்டங்களின் வனத்துறை அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச.22) அந்த குழுவினர் நடத்திய சோதனையில் 4 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து ஒரு புலித்தோலும் கைப்பற்றப்பட்டது.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிக்க: ரஷிய போரில் இந்தியர் பலி...6 மாதங்கள் கழித்து கொண்டுவரப்பட்ட உடல்!

கைதுசெய்யப்பட்ட 7 பேரும் சந்திப்பூர் வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பின்னர் விசாரணையில் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடந்த திங்களன்று (டிச.23) மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்களிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கியும், 8 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் அந்த புலித்தோல் அவர்களிடம் எப்படி வந்தது? அது ஒடிசாவில் வேட்டையாடப்பட்டதா? என்று இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 11 பேரின் மீதும் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமித் ஷா தமிழகம் வருகை ஒத்திவைப்பு?

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழகப் பயணம் ஒத்திவைக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டிச. 27ஆம் தேதி அமித் ஷா தமிழகம் வருவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவரின் பயணம் ஒத்திவைக்கப்படலாம் என... மேலும் பார்க்க

மகனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகன் குகேஷுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.சின்ன திரையிலிருந்து வந்த சிவகார்த்திகேயன் வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். சமீபத்தில் சிவகார்த்... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: தமிழக அரசுக்கு விஜய் வலியுறுத்தல்!

அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவி பாலியல் வன்முறை வழக்கு தொடர்பாக விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக அரசை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

கர்நாடக மாநிலம் ஆவேரி மாவட்டத்தில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.ஆவேரி மாவட்டத்தில் ஆவேரி-தர்வாட் நெடுஞ்சாலையில் ஹூபபள்ளி நோக்கி ஒரே குடும்பதைச் சேர்ந்த 4 பேர் தங்களத... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. பாலியல் புகார்: காவல் துறை விளக்கம்!

அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பாக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வர... மேலும் பார்க்க

பல்கலைகழக வளாகத்தினுள் புகுந்த சிறுத்தைக் குட்டி!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் தாயைப் பிரிந்து பல்கலைகழக வளாகத்தினுள் புகுந்த சிறுத்தைக் குட்டி வனத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.அமராவதி மாவட்டத்திலுள்ள செயின்ட் காட்ஜ் பாபா அமராவதி பல்கலைக்கழகத்தி... மேலும் பார்க்க