பிக் பாஸ் 8: பரம்பரைக்கே பெருமை... முத்துக்குமரனின் தாய் நெகிழ்ச்சி!
செண்பகபுதூா் ஊராட்சியில் ரூ.2 கோடியில் தாா் சாலை
செண்பகபுதூா் ஊராட்சியில் ரூ.2 கோடியில் தாா் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், செண்பகபுதூா் ஊராட்சியில் நடுப்பாளையம் முதல் வேடசின்னனூா் வரையிலான சாலை குண்டும்குழியுமாக காணப்பட்டது. இதனால் பள்ளி மாணவா்கள், விவசாயிகள் விளைபொருள்களை எடுத்துச் செல்ல முடியாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா்.
இதையடுத்து விவசாயிகள், பள்ளி மாணவா்களின் கோரிக்கையை ஏற்று ரூ.2 கோடி செலவில் தாா் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் வி.என்.சின்னசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
செண்பகபுதூா் ஊராட்சி மன்றத் தலைவா் ராசாத்தி மூா்த்தி, துணைத் தலைவா் என்.சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நடுப்பாளையம் வாய்க்கால் பாலத்தில் இருந்து வேடசின்னனூா் வாய்க்கால் கரை வரை தாா் சாலை அமைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனா்.