கள்ளக்குறிச்சியில் ரூ. 7.70 கோடியில் கட்டப்பட்ட 19 மருத்துவ கட்டடங்கள்
பாப்கார்ன், பழைய வாகனங்களுக்கு GST... அதிகம் விமர்சிக்கப்பட்ட வரி விதிப்புகள்!
பாப்கார்னுக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி...பழைய வாகனங்களை விற்க 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி என ஒவ்வொரு தகவல்களாக வெளியாக எதிர்ப்புகள் எகிறிக்கொண்டே போகின்றன.
இந்த அறிவிப்புகள் எல்லாம் எப்போது வெளியாகியது என்று பார்த்தால், அது கடந்த சனிக்கிழமை ராஜஸ்தானில் நடந்த 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தான் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கோவா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களும், சில மாநிலங்களின் துணை முதலமைச்சர்கள், நிதியமைச்சர்கள் மற்றும் மாநில நிதி அமைச்சக அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
கிடையாது...
அந்த ஜி.எஸ்.டி கவுன்சில் மீட்டிங்கில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்...
செறிவூட்டப்பட்ட அரிசிகளுக்கு ஜி.எஸ்.டி வரி 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஜீன் தெரபி, ஏவுகணை தயாரிக்க பயன்படுத்தும் அனைத்து பாகங்கள், அணு ஆய்வுக்காக இறக்குமதி செய்யும் அனைத்து பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி ரத்து.
இனி எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்ளிட்ட பழைய வாகனங்களை விற்கும்போது 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படும். இது முன்பு 12 சதவிகித ஜி.எஸ்.டி வரியாக இருந்தது. இந்த வரி விதிப்பிற்குள் 1200 சிசி அல்லது அதற்கும் மேல் உள்ள பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 1500 சிசி அல்லது அதற்கும் மேல் உள்ள டீசல் வாகனங்கள் அடங்கும்.
ஒரு விவசாயி மிளகை பச்சையாகவோ அல்லது காய வைத்து விற்கும்போதோ மற்றும் உலர் திராட்சையை விற்கும்போதோ, இதற்கு எந்த ஜி.எஸ்.டி வரியும் வராது.
பாப்கார்ன்...
பேக் மற்றும் லேபிள் செய்யப்படாத உப்பு மற்றும் காரம் கலந்த பாப்கார்னுக்கு வெறும் 5 சதவிகித ஜி.எஸ்.டி மட்டுமே விதிக்கப்படும். ஆனால், அதே பாப்கார்ன் பேக் மற்றும் லேபிள் செய்யப்பட்டிருந்தால் 12 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. கேரமல் பாப்கார்னுக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும்.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விதிக்கும் அபராதங்களுக்கு ஜி.எஸ்.டி வரி கிடையாது.
இந்த முக்கிய முடிவுகளில் மிகவும் அதிகம் பேசப்பட்டது மற்றும் விமர்சிக்கப்பட்டது பாப்கார்ன் மற்றும் பழைய வாகனங்கள் சம்பந்தமான அறிவிப்புகள் ஆகும்.
நடுத்தர மக்கள்?!
இப்போதே தியேட்டர்களுக்கு சென்று ஒரு பாப்கார்ன் வாங்க நினைத்தால், அது டிக்கெட்டின் விலையை விட அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் பாப்கார்ன் மீது அதிக ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும்போது, பாப்கார்ன் விலை இன்னும் எகிறும். நடுத்தர மக்களால் பாப்கார்ன் குறித்து யோசித்து பார்க்கவே முடியாமல் போகலாம்.
பழைய வாகனங்கள் விற்பனையை எடுத்துக்கொண்டால், ஒரு வாகனத்தை புதியதாக வாங்கும்போதே வரிகள் அனைத்தும் கட்டி தான் வாங்கியிருப்பார்கள். அதே வாகனத்தை இன்னொருவர் வாங்கும்போது வரி கட்ட வேண்டுமென்றால், அதுவே பெரிய பிரச்னையாக பார்க்கப்படும் நிலையில், தற்போது 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி என்பது கூடுதல் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஜீன் தெரபி, ஏவுகணை, அணு ஆய்வு போன்றவற்றிற்கு ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளது தான். ஆனால், அதனால் நடுத்தர மக்களுக்கு பயன் எதுவும் இல்லை. காரணம், மக்களுக்கு இவைகளில் நேரடியாக தொடர்பில்லை.
இந்த அறிவிப்புகளில், மிளகு மற்றும் உலர் திராட்சை வரி விலக்கு விவசாயிகளுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.