செய்திகள் :

Pushpa 2: "அதுகுறித்து எனக்கு முழுமையாகத் தெரியாது, ஆனால்..."- தேவி ஸ்ரீ பிரசாத் பற்றி நகாஷ் அசிஸ்

post image

'புஷ்பா-2' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தேவி ஸ்ரீ பிரசாத், "தயாரிப்பாளர்கள் கொடுக்கும் சம்பளமாக இருந்தாலும் சரி, ஒரு பணிக்கான நமக்கு வரும் பாராட்டாக இருந்தாலும் சரி, நாம் அதைக் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் கேட்வில்லை என்றால், யாரும் நமக்குத் தகுதியான நன்மதிப்பைக் கொடுக்க மாட்டார்கள்" என்று தயாரிப்பாளர் குறித்து பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.

தேவி ஸ்ரீ பிரசாத்

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் 'புஷ்பா-2' படத்தில் 'ஏய் பித்தா யே மேரா அட்டா' என்ற ஹிட் பாடலைப் பாடிய நகாஷ் அசிஸிடம் இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த நகாஷ் அசிஸ், "இந்த சம்பவம் குறித்து எனக்கு முழுமையாகத் தெரியாது. எனக்கு இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடந்ததில்லை. சில நேரங்களில் எனது சம்பளத்திற்கான பில்லை நான் அனுப்ப மறந்தால் கூட எனது இசை அமைப்பாளர்கள் அனுப்பச் சொல்லி எனக்கு நினைவூட்டுவார்கள்.

தென்னிந்திய இசைத் துறையைப் பொறுத்தவரை மிகவும் நேர்மையான நெறிமுறைகளைக் கொண்டதாகத்தான் கருதுகிறேன். அதே பாலிவுட்டைப் பொறுத்தவரைப் பார்த்தால் பலருக்கும் பல்வேறு சித்தாந்தங்கள் இருக்கும். அதனால் சில நேரங்களில் பணிபுரிவது குழப்பமாகவும் எரிச்சலாகவும் இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.

நகாஷ் அசிஸ்

பிறகு தேவி ஸ்ரீ பிரசாத் குறித்து பேசிய அவர், " என் உயரம் காரணமாக அவர் என்னை 'லம்பு அசிஸ்' என்று அழைப்பார். தேவி ஸ்ரீ பிரசாத்திடம் இருந்து நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதிகாலை 4 மணிக்கு கூட அவர் ஸ்டுடியோவில் இருந்து பணியாற்றுவார். எப்போதும் நம்மை சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார்" என்று கூறியிருக்கிறார்.

Pushpa 2: `ரசிகர்களைக் கட்டுப்படுத்துவது பிரபலங்களின் பொறுப்பு' -தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

'புஷ்பா 2' சிறப்பு திரையிடலின்போது ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட... மேலும் பார்க்க

Allu Arjun : `நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி!' - அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாகக் களமிறங்கிய பாஜக

இந்தியளவில் தற்போது பேசுபொருளாகியிருக்கும் சினிமா நட்சத்திரங்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். கூட்ட நெரிசலில் ரசிகை ஒருவர் மரணித்த விவகாரமும் அதைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜூன் மீதான வழக்குகள் எனப் பல்வே... மேலும் பார்க்க

Rashmika: விமர்சிக்கப்பட்ட புஷ்பா-2 நடனம்... "முதலில் பயமாக இருந்தது; ஆனால்..." - ரஷ்மிகா பதில்

புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி இந்தியளவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில், பேசப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று ரஷ்மிகா மந்தனா நடித்த ஶ்ரீவள்ளி கதாபாத்திரம். அதற்குப் பாராட்டப்பட்ட ரஷ்மிகா, அதேநேரம... மேலும் பார்க்க

Allu Arjun : நடிகர் அல்லு அர்ஜுன், புஷ்பா இயக்குநர் மீது போலீஸில் மற்றொரு புகார் - தொடரும் சிக்கல்!

இந்தியளவில் தற்போது பேசுபொருளாகியிருக்கும் சினிமா நட்சத்திரங்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். புஷ்பா 2 திரைப்படம் வெற்றிப்பெற்றாலும், பல்வேறு சிக்கல்களைத் தொடர்ந்து எதிர்க்கொண்டுவருகிறார். புஷ்பா 2 திரைப்ப... மேலும் பார்க்க

Allu Arjun : `அல்லு அர்ஜுன் நடிப்பது நல்ல படமா... பா.ரஞ்சித் படங்களைப் பாருங்கள்!' - ஹைதராபாத் ஏசிபி

நடிகர் அல்லு அர்ஜுன், புஷ்பா 2 படத்தின் பிரீமியர் ஷோவிற்கு முன் அறிவிப்பின்றி சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, படம் பார்க்கக் குடும்பத்துடன் சென்ற பாஸ்கர் மனைவி (39) பலியானதும், அவரது மகன் (9) கோமாவி... மேலும் பார்க்க

Allu Arjun : நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீச்சு... பதற்றம் - வழக்கு பதிவுசெய்த போலீஸ்!

புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி உலகளவில் வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், அதை கொண்டாட முடியாத சூழலில் சிக்கித் தவித்து வருகிறார் நடிகர் அல்லு அர்ஜுன். புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடலின்... மேலும் பார்க்க