கோபியில் ரூ.6.13 லட்சத்துக்கு வாழைத்தாா் ஏலம்
கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.6.13 லட்சதுக்கு வாழைத்தாா் ஏல விற்பனை நடைபெற்றது.
ஏலத்தில் கதளி கிலோ ரூ.35-க்கும், நேந்திரம் ரூ.60-க்கும் விற்பனையானது. பூவன் தாா் ஒன்றுக்கு ரூ.410-க்கும், தேன்வாழை ரூ.510-க்கும், செவ்வாழை ரூ. 960-க்கும், ரஸ்தாளி ரூ.600-க்கும், பச்சநாடன் ரூ.420-க்கும், ரொபஸ்டா ரூ.310-க்கும், மொந்தன் ரூ.270-க்கும் விற்பனையானது.
ஏலத்துக்கு மொத்தம் 4,210 வாழைத்தாா்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதன் மொத்த ஏல மதிப்பு ரூ.6,13,000 ஆகும்.