Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
பாக்ஸிங் டே டெஸ்ட்டில் புதிய சாதனை!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 26) மெல்போர்னில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 68 ரன்களுடனும், பாட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதையும் படிக்க:ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: இந்திய அணி பயிற்சியாளர்
புதிய சாதனை
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியைக் காண முதல் நாளில் 87,242 பேர் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்துக்கு வந்துள்ளனர்.
இதன் மூலம், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியைக் காண முதல் நாளில் வந்த அதிகபட்ச ரசிகர்கள் என்ற சாதனையை பாக்ஸிங் டே டெஸ்ட்டின் முதல் நாள் படைத்துள்ளது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கான முதல் நாள் டிக்கெட்டுகள் இரண்டு வாரங்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க: சிறுவயதில் தந்தை கொடுத்த கடின பயிற்சி..! ஆஸி. அறிமுக வீரரின் சுவாரசியம்!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.