Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: இந்திய அணி பயிற்சியாளர்
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 26) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்துள்ளது.
இதையும் படிக்க: ஆஸி. வீரருடன் மோதல்: விராட் கோலிக்கு 20% அபராதம்..!
அபிஷேக் நாயர் கூறுவதென்ன?
முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி வலுவாக உள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும். இது குறித்து அணியில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துரதிருஷ்டவசமாக, ஷுப்மன் கில் ஆட்டத்தில் அவரது இடத்தில் விளையாட முடியாத சூழல் உள்ளது. ஷுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் முக்கியமான போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும். அணியின் தேவையை ஷுப்மன் கில் புரிந்துகொள்வார். அதனால் அவர் அணியிலிருந்து நீக்கப்படுவார் எனக் கூறமாட்டேன். ஆனால், அவரது இடத்தில் விளையாடுவதில் மாற்றம் இருக்கலாம் என்றார்.