ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தி குறித்து விழிப்புணா்வுக் கூட்டம்
சிறுவயதில் தந்தை கொடுத்த கடின பயிற்சி..! ஆஸி. அறிமுக வீரரின் சுவாரசியம்!
மெல்போர்னில் நடைபெற்ற 4ஆவது டெஸ்ட்டில் அறிமுகமான ஆஸ்திரேலிய இளம் வீரர் (19) சாம் கான்ஸ்டாஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.
உலகின் நம்.1 வீரரான பும்ராவின் ஓவரில் அதிரடியாக விளையாடி 16 ரன்கள், 18 ரன்கள் என அடுத்தடுத்த ஓவர்களில் ரன்கள் அடித்து கிரிக்கெட் உலகை ஆச்சரியப்படுத்தினார்.
அவரது மனப்பான்மை, அதிரடியாக பயமில்லாமல் விளையாடிய விதமும் அனைவரையும் கவர்ந்துள்ளது.
65 பந்துகளில் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்த சாம் கான்ஸ்டாஸின் தந்தை அவருக்கு சிறு வயதிலேயே வேகப் பந்துகளை அடிக்கும் பயிற்சிகளை வழங்கியுள்ளார்.
இது குறித்து சாம் கான்ஸ்டாஸின் சகோதரர் பில்லி கூறியதாவது:
சிறுவயதில் தந்தை கொடுத்த கடின பயிற்சி
நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது எங்களது தந்தை பௌலிங் எந்திரத்தினுடன் அழைத்து சென்றார். 90 மைல்/மணி வேகத்தில் பந்தினை எறிந்தார். நான் அது ஏதோ 90 கி.மீ/ மணி என நினைத்திருந்தேன்.
எனது தந்தை பௌலிங் எந்திரத்தின்மூலம் பந்தை வீசும்போது கான்ஸ்டாஸ் அதை நடு பேட்டில் நேராக அடித்தார்.
5 அல்லது 6 வயதிலிருந்து ஆஸி. அணிக்காக விளையாடுவது கா ன்ஸ்டாஸுக்கு கனவாக இருப்பதாக நினைக்கிறேன். எங்களது குடும்பத்திலுள்ள அனைவருக்குமே இது கனவு நனவானது மாதிரிதான். நாங்கள் ஆடுகளத்தில் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி.
கனவு நனவானது
நான் ஒரு பிசியோதெரபிஸ்ட். என்னிடம் கொன்ஸ்டாஸ், ‘பில்லி எனக்கு மசாஜ் கிடைக்குமா?’ எனக் கேட்டார். நாளைக்கு எவ்வளவு ரன்களை அடிப்பய் என நான் கேட்டேன். அதற்கு கான்ஸ்டாஸ் ‘கவலைப்படாதே, குறைவான ரன்கள் மட்டுமே அடிப்பேன்’ என்றார். இளம் வயதில் இவ்வளவு ரிலாக்ஸாக இருக்கிறார்.
குடும்பமாக எங்களுக்கு நம்பமுடியாத அனுபவம். ஆடுகளத்தில் நடந்துவரும்போது எங்களுக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. இதயம் சற்று வேகமாக துடித்தது என்றார்.