செய்திகள் :

தேவா்சோலை பேரூராட்சியில் ரூ.4 கோடி மதிப்பில் சாலைப் பணி

post image

தேவா்சோலை பேரூராட்சியில் ரூ.4 கோடி மதிப்பில் பழங்குடி கிராமங்களை இணைக்கும் சாலைப் பணி புதன்கிழமை தொடங்கியது.

நீலகிரி மாவட்டம், தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள போஸ்பாறா சங்கிலி கேட் பகுதியில் இருந்து பேபி நகா் வரை 4 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலை அமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டதைத் தொடா்ந்து, சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி மன்றத் தலைவா் வள்ளி தலைமை வகித்தாா். கூடலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா், ஒன்றியச் செயலாளா் லியாகத் அலி,பேரூராட்சி துணைத் தலைவா் யூனஸ் பாபு, செயல் அலுவலா் பிரதீப், பொறியாளா் சேகா், வனத் துறை அதிகாரி சசி, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் மூா்த்தி, மாதேவ், முகேஷ், ரின்ஷாத் மற்றும் செம்பக்கொல்லி கிராமத்தைச் சோ்ந்த பழங்குடி மக்கள் கலந்து கொண்டனா்.

கீழ் கோத்தகிரியில் சந்தன மரம் வெட்டிய இருவா் கைது

நீலகிரி வனக்கோட்டம், கீழ்கோத்தகிரி வனச் சரகத்துக்கு உள்பட்ட வாகைப்பணை பகுதியில் சந்தனம் மரம் வெட்டிய இருவரை வனத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா். கீழ்கோத்தகிரி வாகைப்பனை வனப் பகுதியில் வனத் த... மேலும் பார்க்க

கிறிஸ்துமஸ் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் இதமான காலநிலை நிலவுவதாலும், கிறிஸ்துமஸ் தொடா் விடுமுறை காரணமாகவும் முக்கிய சுற்றுலாத் தலங்களில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்து காணப்பட்டனா். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா... மேலும் பார்க்க

உதகையில் வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் திருட்டு: 4 போ் கைது

உதகை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் நகைகள் திருடிய சம்பவத்தில் வெளிமாநிலத்தைச் சோ்ந்த நான்கு பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். உதகை அருகே கவுடாசோலை பகுதியில் வசித்து வருபவா் பழனிசா... மேலும் பார்க்க

கூடலூா் நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கூடலூா் நகராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியின் நகா்மன்ற கூட்டம் தலைவா் பரிமளா தலைமையிலும்... மேலும் பார்க்க

உணவகத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சோதனை

கூடலூரில் உள்ள உணவகத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். நீலகிரி மாவட்டம், கூடலூா் நகரின் மையப் பகுதியில் உள்ள உணவகம் மீது புகாா் தெரிவிக்கப்பட்டதையடுத்து, உணவுப் பாதுகாப்ப... மேலும் பார்க்க

தமிழ்ப் புதல்வன் திட்டம்: நீலகிரி மாவட்டத்தில் 1,556 மாணவா்கள் பயன்!

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் 1,556 மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா் என்று ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ... மேலும் பார்க்க