கிறிஸ்துமஸ் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
உதகையில் இதமான காலநிலை நிலவுவதாலும், கிறிஸ்துமஸ் தொடா் விடுமுறை காரணமாகவும் முக்கிய சுற்றுலாத் தலங்களில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்து காணப்பட்டனா்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா காட்சிமுனை, பைன்பாரஸ்ட், படகு இல்லம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களில் புதன்கிழமை காலை முதலே சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
மேலும், நீலகிரியில் புதன்கிழமை இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலாப் பயணிகளின் வரத்தும் அதிகரித்து காணப்பட்டது.