செய்திகள் :

BB Tamil 8 : `மஞ்சரி அவரைதான் பட்டுனு சொன்னாங்க..!' - மஞ்சரி ஃபேமிலி எக்ஸ்க்ளூசிவ்

post image
பிக் பாஸ் வீட்டில் தற்போது ஃபிரீஸ் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த டாஸ்க்கில் அனைத்துப் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து சந்திப்பதோடு மற்ற போட்டியாளர்களுடனான கருத்து முரண்களை தெரிவிக்கிறார்கள். அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை எபிசோடில் மஞ்சரியின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தார்கள். வீட்டிற்குள் அருணுடனும், அன்ஷித்தவுடனுமான முரண்களை அவர்கள் பேசினர். பிக் பாஸ் வீட்டிற்க்குச் சென்று திரும்பிய மஞ்சரியின் குடும்பத்தினரை சந்தித்து பேசினோம்.

நம்மிடையே பேசிய மஞ்சரியின் தாயார், `` வைல்டு கார்ட் போட்டியாளராக வீட்டுக்குள்ள மஞ்சரி போய் இப்போ நல்ல விளையாட்டை கொடுத்துட்டு இருக்கா. ரொம்ப சந்தோஷமாக இருக்கு. எல்லோரும் மஞ்சரி நல்ல விளையாடுறதாக சொல்றாங்க. சில சமயங்கள்ல கவலையும் கொடுக்குது. பிக் பாஸ் வீட்டுக்குள்ள போன சமயத்துல மஞ்சரியின் மகன் நிலவ் `டெவில் டாஸ்க்ல நான் உன்னைப் பார்த்து பயப்படல.

Manjari Family

ஏன்னா நீ என் அம்மா!'னு சொல்லியிருப்பான். அது மாதிரிதான் என் மகள் மஞ்சரி. வீட்டுக்குள்ளையும் அதே மஞ்சரியாகதான் இருக்கிறாள். வீட்டுக்குள்ள இருக்கிறவங்க பல பெயரைக் கொடுக்கிறாங்க. ஆனால் என் மகள் மஞ்சரியாகவேதான் இருக்கிறாள் டாஸ்க் சமயத்துல மஞ்சரியை தனிமைப்படுத்தினாங்க. அந்த விஷயங்களால அவள் அழுதாள். அதுதான் வெளில எங்களுக்கு கவலையைக் கொடுத்தது." என்றார்.

இவரை தொடர்ந்து பேசிய மஞ்சரியின் தங்கை யாகவி, ``பிக் பாஸ் வீட்டுக்குள்ள போனதும் எங்களுக்கு மனதளவுல பாதிக்கப்பட்ட விஷயங்கள் பற்றிதான் கேள்வி கேட்டோம். நாங்க அருண் கிட்டையும், அன்ஷித்தா கிட்டையும் கேள்வி கேட்டோம். அவங்க பண்ணின செயல்கள் வருதத்திற்க்குரிய செயல்களாக இருந்தது. டாஸ்க் விஷயத்தை தாண்டி மஞ்சரியை நெகடிவ்வாக ப்ரோஜெக்ட் பண்ணினாங்க. மஞ்சரி அப்படி கிடையாதுனு எங்களுக்கு தெரியும். மற்ற போட்டியாளர்களெல்லாம் மஞ்சரியை இரண்டு வாரத்துல புரிஞ்சுகிட்டாங்க.

Manjari Family

ஆனால் அருணும் அன்ஷித்தாவும் புரிஞ்சுக்காமல் ஒரே நிலையிலேயே இருந்தாங்க. மஞ்சரி ரொம்பவே ஃபன்னான நபர். அவளுடைய வட்டாரம் ரொம்பவே சின்னதுதான். அவளுடைய எண்ணத்துக்கு பொருந்தி இருகிறவர்களோடதான் நட்பாக இருப்பா. ஸ்கூல் டைம்ல இருந்தே எல்லா செயல்களில் நான்தான் ஃபர்ஸ்ட் வரணும்னு எதிர்பார்ப்பாள். இதுமட்டுமில்ல, நான் ஒரு விஷயத்தை அவ சரியாக சொல்லும்போது அதை மத்தவங்க ஏத்துக்கணும்னு நினைப்பாள். அப்படி இல்லைனா அதுகுறித்து காரணம் கேட்டு பேசுவாள். மஞ்சரிகிட்ட எந்த ஸ்டிரடெஜியும் இல்ல.

அதுனாலதான் அவ வீட்டுக்குள்ள இப்போ வரைக்கும் இருக்கா. டாஸ்க் சமயங்கள்ல ஸ்டிரடெஜி பயன்படுத்தலாம். ஆனால், பிக் பாஸ் வீட்டுல சர்வைவ் பண்றதுக்கு அது பயன்படாது. நம்ம என்னவாக இருக்கிறமோ அதுவாகவே இருந்தால்தான் விட்டுக்குள்ள சர்வைவ் பண்ண முடியும். மஞ்சரிக்கு கைதட்டல் பிடிக்கும். அது அவங்களுக்கு உத்வேகத்தையும் கொடுக்கும். திருமண வாழ்க்கைல பல சவால்களை மஞ்சரி சந்தித்திருக்கிறாள். அந்த பகுதி அவளுடைய வாழ்க்கையில கடினமாகதான் இருந்தது. அந்த விஷயத்துல இருந்து இப்போ மீண்டு வந்துட்டாள்.

Manjari Family

மஞ்சரிக்கு நிலவ்வையும் பட்டுனுதான் கூப்பிடுவாள். அன்னைக்கு அவளுடைய பியூசர் பார்ட்டனரைதான் பட்டுனு கூப்பிட்டாங்க. இப்போ நிலவ் மஞ்சரியை ரொம்பவே மிஸ் பண்றான். அவனும் டிவில பார்த்துட்டு,'ஏன் அம்மா உள்ள இருக்க, வெளில வா'னு சொல்லுவான். " எனக் கூறி முடித்துக் கொண்டார்.

BB Tamil 8: `மூணு வாரம் நல்லா விளையாடிட்டு டைட்டில் வின்னரா நீ வா...' - ஜாக்குலினை தேற்றிய அம்மா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 81-வது நாளுக்கான நான்காவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இன்னும் சில வாரங்களில் இந்நிகழ்ச்சி முடிவுக்கு... மேலும் பார்க்க

BB Tamil 8: 'Jeffry இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம்...' - நெகிழும் ஜெஃப்ரியின் தந்தை

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 81-வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இன்னும் சில வாரங்களில் இந்நிகழ்ச்சி முடிவுக்கு... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 80: `எங்க அக்காவ திட்டாதீங்க' - நெகிழ்ந்த பவியின் தம்பி; அன்ஷிதா கேட்ட மன்னிப்பு

வெவ்வேறு குடும்பங்கள், வெவ்வேறு கலாசாரங்கள், வெவ்வேறு உணர்வுகள். இவை அனைத்தையும் ஒன்றிணைக்கும் கலவையான மையமாக இன்றைய எபிசோடு இருந்தது, போட்டியாளர்கள், தங்களுக்குப் பிரியமானவர்களைக் காண்பதற்காக அடையும்... மேலும் பார்க்க

BB Tamil 8: ``நம்ம பரம்பரைக்கே பெருமை சாமி" - கட்டி அணைத்து நெகிழ்ந்த முத்துகுமரனின் அம்மா, அப்பா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 81-வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்க்கும் ஃப்ரீஸ் டாஸ்க் நடந்த... மேலும் பார்க்க

BB Tamil 8 : ' என் பையனை அப்படி சொன்னது..!' - முத்துகுமரனை சாடிய அருணின் தந்தை

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 81-வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்க்கும் ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து வருக... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: "அதுதான் அன்ஷித்தா..." - சம்மந்தியை அனைவருக்கும் ஊட்டிய அன்ஷித்தாவின் தாய்!

பிக் பாஸ் வீட்டில் ஃபிரீஸ் டாஸ்க் தொடங்கிவிட்டது.போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் வீட்டிற்குள் வந்து மற்ற போட்டியாளர்களுடனான கருத்து முரண்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தின... மேலும் பார்க்க