செய்திகள் :

8 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்து கொலை!

post image

வாரணாசியில் சிறுமியை பாலியல் சீண்டலில், கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் ஒரு பள்ளியருகே 8 வயது சிறுமி ஒருவர் அரை நிர்வாணமாக, இறந்த நிலையில் சாக்குப்பையில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சிறுமியின் உடலை மீட்ட காவல்துறையினர், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியிலிருந்த பல சிசிடிவி கேமராக்களிலும் காவல்துறையினர் சோதனை செய்தனர்.

இந்த சம்பவம் நடந்த பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால், விசாரணை கடினமாக இருந்ததாகக் கூறினர். இருப்பினும், ஒரு சிசிடிவி காட்சியில் சிறுமி பதிவாகியிருப்பது தெரிய வந்தது.

அந்த சிசிடிவி காட்சியில், சிறுமியைப் பின்தொடரும் ஒருவர், திரும்பி வருகையில் கையில் ஒரு சாக்குப் பையுடன் வருவது தெரிகிறது. விசாரணையில், சிறுமியை பின்தொடர்ந்தவர் இர்ஷாத் என்பவர் கண்டறியப்பட்டு, அவரை கைது செய்ய சென்றபோது, காவல்துறையினர் மீது இர்ஷாத் துப்பாக்கிச்சூடு நடத்த முற்பட்டார்.

இருப்பினும், இர்ஷாத் கைது செய்யப்பட்டார். விசாரணையில், கொசுவர்த்தி வாங்குவதற்காகச் சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன், சிறுமி சப்தமிட்டு கூச்சலிட்டதால் கொலை செய்ததும் தெரிய வந்தது.

இதையும் படிக்க:இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக்கப்படும்: ஆம் ஆத்மி

மன்மோகன் சிங் மறைவு: அரைக் கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடிகள்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூ... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் உடலுக்கு ராகுல், கார்கே அஞ்சலி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினர்.வயதுமூப்பு காரணமாக முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவர... மேலும் பார்க்க

2024 மக்களவைத் தோ்தல் தரவுகள் வெளியீடு: தேசிய கட்சிகளுக்கு 63% வாக்கு

மக்களவைத் தோ்தலில் பதிவான மொத்த வாக்குகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசிய கட்சிகள் மட்டும் 63.35 சதவீத வாக்குகளை பெற்றுள்ளன. மக்களவைத் தோ்தலில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மாா்க்சிஸ்ட் கம்யூன... மேலும் பார்க்க

2024 மக்களவைத் தோ்தல்: ஆண்களைவிட பெண்கள் அதிகம் வாக்களிப்பு!

நிகழாண்டு மத்தியில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மொத்த ஆண் வாக்காளா்களில் 65.55 சதவீதத்தினா் வாக்களித்த நிலையில், மொத்த பெண் வாக்களா்களில் 65.78 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா் என்று தோ்தல் ஆணையம் தெ... மேலும் பார்க்க

நிதீஷ் குமாருக்கு ஆா்ஜேடி மீண்டும் அழைப்பு

பாட்னா: பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவு செய்தால், முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் மீண்டும் இணைய தயாா் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) எம்எல்ஏ பாய் வீரேந்திரா தெரி... மேலும் பார்க்க

இந்திய வரைபட சா்ச்சை: காங்கிரஸ் மீது பாஜக சாடல்

‘கா்நாடகத்தில் நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்கான வரவேற்பு பேனா்களில் முழுமையான ஜம்மு-காஷ்மீா் பிராந்தியம் இல்லாத இந்திய வரைபடத்தை வெளியிட்டு காங்கிரஸ் கட்சி தேச விரோத செயலில் ஈடுபட்டுள்ளது... மேலும் பார்க்க