செய்திகள் :

இந்திய வரைபட சா்ச்சை: காங்கிரஸ் மீது பாஜக சாடல்

post image

‘கா்நாடகத்தில் நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்கான வரவேற்பு பேனா்களில் முழுமையான ஜம்மு-காஷ்மீா் பிராந்தியம் இல்லாத இந்திய வரைபடத்தை வெளியிட்டு காங்கிரஸ் கட்சி தேச விரோத செயலில் ஈடுபட்டுள்ளது’ என்ற பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி, ‘இந்திய வரைப்படத்தை இதுபோன்று மாற்றிப் பயன்படுத்துவது காங்கிரஸுக்கு ஒன்றும் புதிய விஷயமில்லை. இதற்கு முன்பும் பல முறை இதே தவறை காங்கிரஸ் செய்துள்ளது.

ஆனால், இந்த முறை விடுபட்ட இந்திய பிராந்தியங்கள் மூலம் காங்கிரஸ் கட்சி பலருக்கும் மறைமுகமாக பல செய்திகளைக் கூறியுள்ளதாக தெரிகிறது. இது இந்திய தேசியத்துக்கு எதிரான அக்கட்சியின் மற்றொரு தவறான முயற்சி. இது யாா் தூண்டுதலின் பேரில் நடைபெற்றது என்பது தெரிய வேண்டும்.

இந்தியாவை எந்த நிலைமைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற காங்கிரஸின் நோக்கம், இந்த படத்தின் மூலம் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. தேசத்துக்கு எதிரான நபா்களுடன் காங்கிரஸ் கைகோத்துள்ளது. ஆனால், பிரதமா் மோடி தலைமையிலான அரசு காங்கிரஸ் கட்சியின் இதுபோன்ற முயற்சிகளுக்கு இடம் கொடுக்காது என்றாா்.

காங்கிரஸ் விளக்கம்: இதுகுறித்து கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘ஒரு சிலா் சரியான புரிதல் இல்லாமல், பதாகையில் தவறான இந்திய வரைபடத்தை வைத்திருக்கலாம். அதை நாங்கள் நீக்கி விட்டோம். ஆனால், சிலா் தவறு கண்டுபிடிக்க முயல்கின்றனா். பாஜகவால் எதையும் சகித்துக்கொள்ள முடியவில்லை’ என்றாா்.

திரிபுராவில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 100க்கும் மேற்பட்டோர் கைது!

தலைநகர் அகர்தலாவில் கடந்த 5 மாதங்களில் மட்டும் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 100க்கும் மேற்பட்டோர் கைது! கடந்த ஆகஸ்டு மாதம் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பி... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் மறைவு: அசாமில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அசாம் அரசு 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்(92 )உடல்நலக் குறைவு காரணமாக தில்லி ... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

தில்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. 26) இரவு ... மேலும் பார்க்க

பிஎம்டபிள்யூ காரை விரும்பாத மன்மோகன் சிங்! - பாஜக அமைச்சர் பகிர்ந்த தகவல்!

பிரதமராக இருந்தபோதும் மன்மோகன் சிங் மிகவும் எளிமையாகவே இருந்தார். அதற்கு எடுத்துக்காட்டான ஓர் நிகழ்வை உத்தரப் பிரதேச மாநில பாஜக அமைச்சரான அசிம் அருண் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதிநவீன பிஎம்டபி... மேலும் பார்க்க

மன்மோகன் சிங்கின் வாழ்க்கை தலைமுறையினருக்குப் படமாக அமையும்: பிரதமர் மோடி

மறைந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் மரணம் தேசத்திற்கு ஒரு பெரிய இழப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில... மேலும் பார்க்க

அமைதியான பிரதமரா? - மன்மோகன் சிங் கூறிய பதில் என்ன?

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்(92) வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. 26) இரவு காலமானார். தில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைப்... மேலும் பார்க்க