Manmohan Singh: 'அவர் பிரதமராக இருந்த போது அடிக்கடி பேசுவேன்' - இரங்கல் பதிவில் ...
BB Tamil 8 : ' என் பையனை அப்படி சொன்னது..!' - முத்துகுமரனை சாடிய அருணின் தந்தை
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 81-வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்க்கும் ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. தீபக், மஞ்சரி, விஜே விஷால், சௌந்தர்யா, பவித்ரா, ராணவ் குடும்பத்தினர் வந்திருந்தனர். பல நெகிழ்வான தருணங்கள் நடந்திருக்கின்றன. இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் ப்ரோமோவில் அருணின் அப்பா, அம்மா வந்திருக்கின்றனர்.
இந்த வீட்டில் இருக்கும் யார் மீதாவது உங்களுக்கு முரண்பாடு இருந்தால் தெரியப்படுத்துங்கள் என்று பிக் பாஸ் கேட்க அருணின் அப்பா மஞ்சரி, மற்றும் முத்துகுமரனை சொல்கிறார். அதிலும் குறிப்பாக 'அருணின் செயல்பாடுகளைத் தாங்கமுடியல எதாச்சும் பண்ணி விடலாம்னு நினைக்கிறேனு முத்துகுமார் சொன்னாரு அவர் அப்படி சொன்னது உச்சம்னு நினைக்கிறேன்' என்று அருணின் தந்தை தனது முரண்பாடை சொல்கிறார்.