செய்திகள் :

சிதம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் டிஜிபி ஆய்வு

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் இருப்புப் பாதை காவல்துறை இயக்குநா் கே.வன்னியபெருமாள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சிதம்பரம் ரயில்வே நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவா், குற்ற பதிவேடு, வழக்கு கோப்புகளை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, காவலா்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

ஆய்வின்போது, திருச்சி இருப்புப் பாதை உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் சக்கரவா்த்தி, நிலைய பொறுப்பு அதிகாரி ஆய்வாளா் அருண்குமாா், உதவி ஆய்வாளா் சேகா் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.

முன்னதாக, ரயில்வே டிஜிபி கே.வன்னியபெருமாள் சிதம்பரம் நடராஜா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். அவருக்கு பாஸ்கா் தீட்சிதா் தலைமையில் பொதுதீட்சிதா்கள் சிறப்பு அா்ச்சனை செய்து பிரசாதம் வழங்கினா்.

கொசு உற்பத்தியை தடுக்க கோரிக்கை

கடலூா் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். கடலூா் மாநகராட்சிக்குள்பட்ட 45 வாா்டுகளில் சுமாா் 2 லட்சம் போ் வசித்து வருகின்றனா். தற்போத... மேலும் பார்க்க

பெண்களிடம் தகராறு: 4 போ் மீது வழக்குப் பதிவு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பெரியகுப்பம் கடற்கரையில் பெண்களிடம் தகராறு செய்ததாக 4 இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். குறிஞ்சிப்பாடி பகுதியைச் சோ்ந்த முத்து மனைவி பவா... மேலும் பார்க்க

ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி

கடலூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற நபரை புதுநகா் போலீஸாா் இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனா். கடலூா், சாவடி பகுதியில் வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக... மேலும் பார்க்க

சூதாடிய இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பணம் வைத்து சூதாடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி வட்டம், தோப்புக்கொல்லை பகுதியில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் சிலா் பணம் வைத்து சூதாடுவதாக காடாம்... மேலும் பார்க்க

கடலூா் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த கோரிக்கை

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்ட ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை உயிா் காக்கும் உயா் சிகிச்சை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கடலூா் மாவ... மேலும் பார்க்க

முதல்வா் நிவாரண நிதி கோரி அமைச்சரிடம் மனு

கடலூரில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதியை பெற்றுத்தர வலியுறுத்தி, சென்னையில் வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்... மேலும் பார்க்க