டாக்டர் மன்மோகன் சிங் மறைவு: 7 நாள்கள் அரசு துக்கம் அனுசரிப்பு!
பும்ராவின் 4,484 பந்துகளுக்குப் பிறகு முதல் சிக்ஸர்..! சாதனை படைத்த இளம் வீரர்!
பும்ரா ஓவரில் 4,484 பந்துகளுக்குப் பிறகு முதல் சிக்ஸர் அடித்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
பார்டர் - கவாஸ்கர் தொடரின் 4ஆவது போட்டி மொல்போர்னில் நடைபெற்றுவருகிறது.
இந்தப் போட்டியில் பும்ராவின் ஒரே ஓவரில் 4,6,0,0,4 என 16 ரன்கள் அடித்து அசத்தினார். அந்த 3 ஷாட்டுகளுமே ரேம் ஷாட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
பும்ரா வீசிய 2ஆவது ஓவரிலேயே இதை கான்ஸ்டாஸ் முயற்சி செய்தார். பந்து பேட்டில் படவில்லை. அதற்கடுத்து வீசிய பும்ரா ஓவரினை அசத்தலாக விளையாடினார்.
தொடர்சியாக பும்ரா வீசிய இரண்டு ஓவர்களில் சிக்ஸர் அடித்து அசத்தினாட் சாம் கான்ஸ்டாஸ்.
இதன்மூலம் பும்ராவின் ஓவரில் 4,484 பந்துகளுக்குப் பிறகு முதல் சிக்ஸர் அடித்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. தனது அறிமுகப் போட்டியேலேயே அரைசதம் அடித்து அசத்தினார்.
60 ரன்களுக்கு ஜடேஜா ஓவரில் கான்ஸ்டாஸ் ஆட்டமிழந்தார். இருப்பினும் அவரது தாக்கம் அதிகமாக இருந்தது. 90,000 பார்வையாளர்கள் அவருக்கு எழுந்து நின்று ஆதரவு தெரிவித்தார்கள்.
ஆட்டமிழந்தப் பின் ஆஸி ரசிகர்கள் (இந்திய ரசிகர்களும்) அவரிடம் ஆட்டோகிராப் பெற்றார்கள். சிலர் புகைப்படங்களும் எடுத்துகொண்டார்கள்.