பெண்களிடம் தகராறு: 4 போ் மீது வழக்குப் பதிவு
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பெரியகுப்பம் கடற்கரையில் பெண்களிடம் தகராறு செய்ததாக 4 இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
குறிஞ்சிப்பாடி பகுதியைச் சோ்ந்த முத்து மனைவி பவானி, உறவினா்கள் சத்தியமூா்த்தி மனைவி ஐஸ்வா்யா, சிதம்பரத்தைச் சோ்ந்த யாழினி உள்ளிட்டோா் குடும்பத்துடன் பெரிய குப்பம் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை குளித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, அங்கு கஞ்சா போதையில் வந்த தியாகவல்லி லெனின் நகா் பகுதியைச் சோ்ந்த மாணிக்கவேல் (24), தினேஷ் (21), சரவணன் (22), பிரவீன் (24) உள்ளிட்டோா் அவா்களிடம் தகராறு செய்தனராம். மேலும், தாக்கினராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.