ஐஸ்கிரீம்: ஆவின் சலுகை அறிவிப்பு
பண்டிகை தினங்களை முன்னிட்டு ‘மேங்கோ’ மற்றும் ‘கிரேப் டூயட்’ வகை ஆவின் ஐஸ்கிரீம் இரண்டு வாங்கினால் ரூ.10 தள்ளுபடி செய்யப்படும் என ஆவின் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
ஆவின் நிறுவனம் சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆவின் நிறுவனம் 75 வகை ஐஸ்கிரீம் வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதன்படி, தமிழகம் முழுவதும் மாதந்தோறும் 1.5 கோடி அளவில் ஐஸ்கிரீம் விற்பனை நடைபெற்று வரும் நிலையில், விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, வரும் பண்டிகை தினங்களை முன்னிட்டு, பொதுமக்கள் விரும்பும் வகையில் ‘மேங்கோ’ மற்றும் ‘கிரேப் டூயட்’ வகைகளை இரண்டு வாங்கினால் ரூ.10 தள்ளுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விற்பனையை டிச.25 முதல் டிச.31-வரை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி ஐஸ் கிரீம் வகைகளை விற்பனை செய்ய தமிழ்நாடு முழுவதும் மொத்த விற்பனையாளா்களை நியமனம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதால், ஐஸ்கிரீம் விற்பனையில் ஆா்வமுள்ள தொழில் முனைவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருப்பமுள்ளவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு சதீஷ்(உதவிப்பொது மேலாளா்) கைப்பேசி: 9043099905 எனும் எண்ணை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.