செய்திகள் :

BB Tamil Day 79: ரயானின் அக்கா கிளப்பிய சூறாவளி; குடும்பங்கள் கொளுத்திப் போட்ட சரவெடி

post image
‘இந்த வாரம் டாஸ்க் கடுமையா இருக்கும்’ என்று விசே சொன்னது, சும்மா ஜெர்க் தருவதற்காக போல. நிகழ்ந்ததென்னமோ ‘சென்டிமென்ட்’ குடும்பச் சந்திப்பு. வழக்கமான ஃபார்மட்டில் அல்லாமல் விருந்தினர்களை நீண்ட நேரம் இருக்க வைத்து ‘முரண்பாடுகளை’ நோண்டியெடுத்து கோள் மூட்டி விட்டார் பிக் பாஸ்.

வந்த விருந்தினர்களில். விஷால் மற்றும் அவரது அப்பாவின் சந்திப்பு அதிக நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு மினி சுனாமியை சைலன்ட்டாக  ஏற்படுத்தி விட்டார், ரயானின் அக்கா. 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 79

காலை எட்டு மணிக்கே முதல் செட் கெஸ்ட்டை அனுப்பி அழகு பார்த்தார் பிக் பாஸ். ‘ஊத்தை வாயோட இருக்கற இவங்களை எப்படி பார்க்கறது?’ என்று தீபக்கின் மனைவி சிணுங்கிக்கொண்டே  கேட்டது நியாயமான கேள்வி. தன் குடும்பத்திற்கு முன்னால் அழகாகத் தோற்றமளிக்கவே பலரும் விரும்புவார்கள். வீட்டில் கொள்ளையடிக்க வந்தவர்களின் பாணியில் பதுங்கி பதுங்கி வந்தார்கள், தீபக்கின் மனைவி சிவரஞ்சனியும் அவர்களின் மகனும். 

BBTAMIL 8: DAY 79

தீபக்கின் படுக்கையைத் தேடிச் சென்று பக்கத்தில் படுத்து இறுக்க அணைத்துக் கொண்டார் அவரது மனைவி. ‘யார்ரா அவன் மேல காலைப் போடறவன்’ என்று ராணவ்வை எரிச்சலுடன் தீபக் நினைத்துக் கொண்டார் போல. விழித்துப் பார்த்தவருக்கு சர்ப்ரைஸ். ரியாக்ட் கூட செய்ய முடியாமல் திகைத்துப் போயிருந்தார்.  தனது குடும்பத்தாருடன் தனியாகப் பேசிய போது “அப்பா செத்துப் போன பிறகு இப்பதான் அழறேன்” என்று  அடக்க முடியாமல் அழுத தீபக்கிடம் “உன்னை நினைச்சு பெருமையா இருக்கு. பவுன்ஸ்பேக் ஆகி வந்தே தெரியுமா.. சூப்பர்” என்று ஊக்கமான வார்த்தைகளைச் சொன்னார் ரஞ்சனி. பூஸ்ட் விளம்பரக் குழந்தை மாதிரி புஷ்டியாக இருந்த தீபக்கின் மகனும் ‘you made me proud’ என்று பெருமிதம் அடைந்தான். 

“அழாதடா..” என்று கெஞ்சிய மனைவியிடம் “ஏண்டி.. நான் ரியாக்ஷனே பண்ண மாட்டேறன்னு சலிச்சுக்கற.. அழுதாலும் வேணாங்கிற” என்று கலங்கிய சமயத்திலும் ஜோக் அடித்தார் தீபக். “நீ Emotionally unavailable person. அந்தக் குணாதிசயம்தான் இங்க  யூஸ் ஆகுது” என்று உளவியல் நிபுணர் போல் கணித்துச் சொன்னார் ரஞ்சனி.  

யதார்த்தமாகப் பேசிய தீபக்கின் மனைவி

“எல்லோரும் வாங்க.. கார்டன் ஏரியால அப்படியே குத்த வெச்சு உக்காருவோம்” என்று ஃபார்மாலிட்டியை உதறிப் போட்டு கீழே அமர்ந்தார் தீபக். “இந்த ஷோல இருந்து நான் என்ன கத்துக்கிட்டேன்னா.. யாரையும் சீக்கிரம் ஜட்ஜ் பண்ணக்கூடாதுன்னு” என்று ரஞ்சனி சொன்னது திருவாசகம். 

“யாரிடமாவது உங்களுக்கு முரண்பாடு இருந்தால் இப்போது சொல்லலாம்” என்று கொளுத்திப் போட்டார் பிக் பாஸ். அதென்னமோ வந்தவர்கள் எல்லோருமே முதலில் அருணைத்தான் கூப்பிட்டு அடித்தார்கள். அதனாலேயே இன்று முழுக்க டல்லாக இருந்தார் அருண். ஹார்லி க்வீன் வந்தால்தான் சரியாவார் போலிருக்கிறது. 

BBTAMIL 8: DAY 79

“நான் சொல்றது biased-ஆ இருக்கும்” என்று ரஞ்சனி முதலிலேயே ஒப்புக் கொண்டது நேர்மையான விஷயம். “அருணை ஒரு விஷயத்துல கன்வின்ஸ் பண்ணவே முடியாது. அன்ஷிதாவை இவர் சமாதானப்படுத்தறதெல்லாம் பார்த்தா எனக்கு ரொம்ப ஆச்சரியம். என்னையெல்லாம் அப்படி பண்ணதேயில்லை. ஜெப்ரி.. உன்னை உங்க அம்மா ரொம்ப நல்லா வளர்த்திருக்காங்க.. பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரிஞ்சிருக்கு” என்று வரிசையாக ஒவ்வொருவரையும் பற்றிச் சொன்னார்  ரஞ்சனி. 

தீபக் அவரது மனைவிக்கு ப்ரபோஸ் செய்ய வேண்டும் என்கிற டாஸ்க் இனிமையாக நிகழ்த்தப்பட்டது. “ரஞ்சனி.. முரண்பாடு கேட்டேனே.. நீங்க இன்னமும் அதைப் பண்ணலை” என்று ஜாலியாகச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் மீண்டும் பட்டாசைக் கொளுத்தினார் பிக் பாஸ். “அருணுக்கு தீபக் மேல வருத்தம் இருக்கறது தெரியும். அதுக்காக பர்சனல் அட்டாக் செஞ்சிருக்கக்கூடாது. டாஸ்க்ல என்ன வேணா செய்யலாம். அது வேற. அவரை தனிப்பட்ட வகையில் உங்களுக்கு தெரியாதப்ப,  பர்சனால சொல்லி காரெக்டர் அஸாஸினேஷன் பண்ணக்கூடாது. அவர் அப்படிப்பட்ட ஆள் இல்ல” என்று தன் கணவருக்காக ரஞ்சனி பரிந்து பேசிக் கொண்டிருக்க அருணின் முகத்தில் சுரத்தே இல்லை. ‘ஸாரிம்மா’ என்று கையெடுத்துக் கும்பிட்டார்.  

BBTAMIL 8: DAY 79

“நான் என்ன்ப்பா பண்றது.. நல்ல விஷயங்களை மட்டும்தான் பேசணும்னு வந்தேன். இந்த பிக் பாஸ்தான் கோத்து விட்டார் ” என்கிற மாதிரி அருணின் தோளைத் தட்டி ஆறுதல் சொன்னார் ரஞ்சனி. தீபக்கின் குடும்பம் விடைபெற்றுச் சென்ற பிறகு “உங்களை மாதிரி எனக்கு ஒரு அப்பா வேணும் தீபக் அண்ணா.. பார்க்கவே அத்தனை நல்லா இருந்துச்சு” என்று நெகிழ்ந்தார் அன்ஷிதா. 

“டெவிலா இருக்கப்ப பயந்தியா? - இல்ல நீ என் அம்மா” - சூப்பராக பதில் சொன்ன மஞ்சரியின் மகன்


அடுத்த விருந்தினரின் வருகை. “எல்லோரும் வரிசையா நின்னு கையை விரிச்சு நில்லுங்க” என்ற போதே தெரிந்து விட்டது, யாருடைய மகனோ அல்லது மகளோ வரப்போகிறார்கள் என்று. தன் அப்பா, அம்மா என்று நினைத்துக் கொண்ட சவுந்தர்யா, “ராணவ் டாஸ்க்கை கெடுத்துடாத” என்று அந்தச் சமயத்திலும் ஏழரையைக் கூட்டினார். வரப்போவது தன் மகன் என்பதை மஞ்சரி சரியாக யூகித்தார் போல. கண்ணை மூடிய நிலையிலேயே உணர்ச்சிப் பெருக்கில் இருந்தார்.  வந்தவர்கள் மஞ்சரியின் மகன் நிலவ், அம்மா, தங்கை, மற்றும் தங்கையின் கணவர் பிரேம் டாவின்சி. இவர் டிஜிட்டல் ஓவியர். விகடன் குழும வெளியீடுகளில் இவரது அபாரமான கைவண்ணத்தைப் பார்த்திருக்கலாம். 

மகனை வாரிக் கட்டியணைத்து முத்த மழை பொழிந்த மஞ்சரி, “டெவிலா இருக்கப்ப அம்மாவைப் பார்த்து பயந்தியா?” என்று கேட்க “இல்ல.. ஏன்னா.. நீ என் அம்மா” என்று அவன் சொன்னதைப் பார்த்து ஆரண்ய காண்டம் படத்தின் காட்சி நினைவிற்கு வந்தவர்கள் பலர் இருக்கலாம். (உங்க அப்பான்னா உனக்கு ரொம்ப பிடிக்குமா..? ‘அப்படி இல்ல.. ஆனா அவர் எங்க அப்பா”) 

BBTAMIL 8: DAY 79

“நீ அழறதை டிவில பார்க்க முடியாம உங்க அப்பா உள்ளே போயிட்டாரு” என்று அம்மா சொல்ல அதைக் கேட்டு நெகிழ்ந்த மஞ்சரி “பொய்க்காரின்னு சொல்றாங்க. நான் எங்கே பொய் சொன்னேன்?” என்று சலித்துக் கொண்டார்.  “முரண்பாட்டைச் சொல்லுங்க” என்று பிக் பாஸ் கோத்துவிட “அருண்.. நீங்க மஞ்சரியை தப்பா ப்ரொஜக்ட் பண்றீங்க” என்று முதலில் அவரைக் கூப்பிட்டு அடிக்க, கும்பிட்ட கையை இறக்காமல் இருந்தார் அருண். “அன்ஷிதா.. டாஸ்க்ல தொடர்ற விஷயத்தை பர்சனாலாவும் பகையா அப்படியே வெச்சுக்கறீங்க” என்று சொல்ல சங்கடமடைந்த அன்ஷிதா “டாஸ்க்ல அப்படி ஆயிடுது” என்று சமாளித்தார். 

“அன்ஷிதா பொய் சொல்ல மாட்டா.. ஜாக்கும் மஞ்சரியும்தான் பொய் சொல்லுவாங்க” என்று சவுந்தர்யா புறணி பேசியது இப்போது பொதுவில் அம்பலமாக ‘அடிப்பாவி” என்கிற மாதிரி சவுண்டைப் பார்த்தார் ஜாக்குலின்.  இந்த விஷயம் பிறகு பற்றிக் கொண்டு எரிந்தது. “ஸ்ட்ராங்கா ஒரு விஷயத்தைப் பத்தி கம்ப்ளெயிண்ட் பண்றதுக்கு முன்னாடி ஒண்ணுக்கு ரெண்டு முறை யோசிச்சா.. லட்சக்கணக்கில் உனக்கிருக்கிற ரசிகர்கள் கோடிக்கணக்கா மாறுவாங்க” என்று அழுது கலங்கிய சவுண்டிற்கு தனிமையில் அட்வைஸ் செய்தார் ரயான். 

தொடர்ந்து அடிவாங்கிய அருண்


அடுத்தது விஷாலின் குடும்பம். அவரது ‘அவ்வா’ சினிமா பாணியில் ஓடி வந்து கட்டிக் கொண்டு முத்த மழை பொழிந்தார். ‘அப்பா வரலையா?’ என்று ஏக்கத்துடன் கேட்ட விஷால், அதற்காக ரொம்பவும் ஃபீல் ஆகி கண்கலங்கினார். பிறகு அருணைக் கட்டிக் கொண்டு அழுதார். விஷாலின் அவ்வாவிற்கு சவுந்தர்யாவை பிடிக்குமாம். ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்’ என்கிற விஜய் டிவியின் டெம்ப்ளேட் பாடல் ஒலிக்க, சினிமா பாணியில் பதறியடித்துக் கொண்டு ஹீரோ மாதிரி வெளியே ஓடி வந்தார் விஷால். 

உள்ளே வந்தார் முனிகுமார்.  தந்தையைப் பார்த்ததும் உறைந்து நெகிழ்ந்து கட்டியணைத்துக் கொண்டார் விஷால். “நீங்களும் சவுந்தர்யா ஃபேனா?” என்று அவரிடம் முத்து போட்டு வாங்க “அது பாட்டுக்கு குழந்தை மாதிரி இங்கயும் அங்கயும் ஓடிட்டு இருக்கும்” என்றார் அவ்வா. “எல்லோருமே சவுந்தர்யா ஃபேன்தான்” என்ற முனிகுமார், பின்குறிப்பாக “அப்படி சொன்னாதானே பேக்கரில ஏதாச்சும் கொடுப்பாங்க” என்று வாரியது நல்ல நகைச்சுவை. 

BBTAMIL 8: DAY 79

‘முரண்பாடு.. முரண்பாடு” என்று விடாமல் ஞாபகப்படுத்தினார் பிக் பாஸ். (அவரு பொழப்ப அவரு பார்க்கணும்ல!)  இப்போதும் அருண்தான் மாட்டிக் கொண்டார். “ஏம்ப்பா.. ரெண்டு பேரும் நல்ல பிரெண்ட்ஸ்தானே. அப்புறம் ஏன் சண்டை போட்டீங்க.. யார் மேல தப்பு. காப்டனா இருந்தாலும் பிரெண்டுதானே?”என்று முனிகுமார் கேட்க வழக்கம் போல் சங்கடமான முகத்துடன் இருந்தார் அருண்.  மகனின் பாஷையிலேயே பேசிய முனிகுமார், ‘பாஸே’’’ என்று பிக் பாஸை அழைத்தார். ‘மஞ்சரி மேம். விஷாலை ஏன் உங்களுக்குப் பிடிக்கலை?” என்று கேட்க “பர்சனலா விஷாலைப் பிடிக்கும். ஆனா பிளேயரா பிடிக்காது” என்று தெளிவாகச் சொன்னார் மஞ்சரி. 

“விஷால் கையில் புதுசா.. ஒரு செயின் பார்த்தீங்களா..?” என்று ஜாக்குலின் ஜாலியாக போட்டுக் கொடுக்க “பாத்தேன்.. பாத்தேன்..’ என்று விஷமமாகச் சொன்னார் முனிகுமார். “உன் பங்களிப்பு கம்மியா இருக்கு.  நல்லா விளையாடு” என்கிற மாதிரி அம்மா தனிமையில் அட்வைஸ் கொடுத்தார். விஷாலின் அப்பாவிற்கும் அவருக்குமான உறவு, பெரும்பாலான தந்தை -மகன் உறவைப் போலவே இருந்தது. 

கலங்க வைத்த தந்தை - மகன் உறவு

“நான் சண்டை போட்டா அவன் என் கிட்ட பேச மாட்டான். இப்பத்தான் நானும் அவனும் ஒருத்தரையொருத்தர் புரிஞ்சிருக்க ஆரம்பிச்சிருக்கோம்.. நான் அவனுக்கு நிறைய கஷ்டம் கொடுத்திருக்கேன். இன்னிக்கு நான் உயிரோட இருக்கேன்னா.. அதுக்கு அவன்தான் காரணம்” என்று முனிகுமார் கண்கலங்க, ‘அப்பா’ என்கிற கேவலுடன் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டார் விஷால். “அழட்டும்.. மன்னிப்பு கேட்கட்டும். அதுதான் சரியானது’ என்று யதார்த்தமான நியாயத்தைப் பேசினார் அவ்வா. “நீங்க வில்லன் ஆகி என்னை ஹீரோவாக்கிட்டீங்க” என்று ரத்தினச் சுருக்கமாகச் சொன்னார் விஷால். 

விருந்தினர்களின் மூலம் வந்த கமெண்ட் காரணமாக சவுந்தர்யா அப்செட் ஆகி அழ ஆரம்பித்தார்.  “நான் கேம் ஆட வந்திருக்கேன். பிரெண்ட்ஷிப்பை மட்டும் காண்பிக்க முடியுமா?” என்று சவுந்தர்யா சொன்னது நியாயமான விஷயம். 

கண்ணாடி முன்னால் தலைமுடியைச் சரி செய்து கொண்டிருந்த ரயான், ‘ஃப்ரீஸ்’ என்கிற வார்த்தையைக் கேட்டு திகைப்படைந்தார். வரவிருப்பது  தன்னுடைய குடும்பம் என்கிற அவருடைய உள்ளுணர்வு சரியாக வேலை செய்தது. தன் மகனை பெரிய திரையில் பார்க்கும் வரை, சினிமா பார்க்கக்கூடாது என்று முடிவு செய்திருந்த ரயானின் அம்மாவும் கறாராகப் பேசும் சகோதரியும் உள்ளே வந்தார்கள். ‘ஃபேமிலி கூட நிறைய டைம் செஞ்சதில்லை” என்று முன்பு ஃபீல் செய்த ரயான், இப்போது கூடுதலாக கலங்கினார். “இத்தனை வருஷத்துல இப்பதான் அம்மாவை  கட்டிப்பிடிக்கறேன்” என்றார். 

சூறாவளியை ஏற்படுத்திய ரயானின் அக்கா


ரயானை தனிமையில் அழைத்துச் சென்ற குடும்பம், “டாஸ்க்ல சூப்பரா பண்றே. ஆனா சுத்தியிருக்கறவங்களை நம்பாத. தீபக் மட்டும்தான் உன் பின்னாடி நல்லதா சொல்றாரு” என்று அக்கா சொல்ல “ஜாக் கூடவா புறணி பேசறாங்க?” என்று திகைப்படைந்தார் ரயான்.  “உனக்கு NFP கிடைச்சதுல  முத்துவிற்கும் மஞ்சரிக்கும் விருப்பமே இல்லை. அதைப் பத்தி ஊர் முழுக்க பேசறாங்க. அதனால ஜாக் மனசும் மாறிடுச்சு” என்று அவர் சொல்ல “ஆமாம்.. என்னாலதான் உனக்கு கிடைச்சதுன்னு சொல்லிட்டே இருந்தா” என்று ஷாக் ஆனார் ரயான். 

“மத்தவங்களால உன் கேம் ஸ்பாயில் ஆயிடக்கூடாது. உன்னோட தனித்தன்மையே இங்க  இல்ல. நாங்க பார்க்கற ரயானே இல்லை. உன் பெரிய பிரச்சினையே உன் வாய்தான்” என்று அக்கா இறங்கி அடிக்க திகைத்துப் போயிருந்தார் ரயான். சகோதரியின் குழந்தைகள் ஸ்டோர் ரூம் வழியாக உள்ளே வர “என்னைத் தெரியுதா” என்று அவர்களிடம் ஆவலாக கேட்டு “இல்லை.. நான் டிவி பார்க்கறதில்லை” என்கிற பதிலைக் கேட்டு பல்பு வாங்கினார் சவுந்தர்யா. 

BBTAMIL 8: DAY 79

பெண்கள் ஏரியாவிலேயே எப்போதும் ரயான் சுற்றிக் கொண்டிருப்பதைப் பற்றி மற்றவர்கள் ஜாலியாக புகார் சொல்ல “லவ் இல்லைன்னா போர் அடிக்கும்” என்று சொல்லி ஏரியாவை ஜாலியாக அதிர விட்டார் ரயானின் அம்மா. “ஆனா எல்லாமே லிமிட்தான். தாண்டினா பிரச்சினைதான்” என்கிற அட்வைஸூம் கூடவே கிடைத்தது.

முரண்பாட்டைப் பற்றி பிக் பாஸ் நினைவுப்படுத்த, முன்னர் தனிமையில் சொன்ன அதே விஷயத்தை பொதுவில் சொல்லி ரயானை சங்கடத்தில் ஆழ்த்தினார் அக்கா. “அதான் அங்க தனியா சொன்னீங்கள்லே.. அப்புறம் ஏன் இங்கயும் சொல்லணும்?” என்று தெலுங்கில் ‘மாட்லாடி’ அவர் கோப்பட, “சரி விடு. அவங்களுக்கும் தெரியட்டும்” என்றார் அம்மா. “ரத்தம் சிந்தினாதான் டாஸ்க்ல நல்லாப் பண்ணதா அர்த்தமா.. தீபக் அண்ணாவோட ஆட்டம் பிடிச்சிருக்கு” என்றார் அக்கா. 

“ரயானுக்கு ஏன் கிடைச்சதுன்ற மாதிரி நாங்க சொல்லவேயில்ல” என்கிற மாதிரி முத்துவும் மஞ்சரியும் பின்னால் பேசிக் கொண்டார்கள். விருந்தினர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்கிற எண்ணமாக இருக்கலாம். குடும்பத்தினர் சென்ற பிறகு அதற்காக ரயான் மன்னிப்பு கேட்க “இது கூட கேக்கலைன்னா.. அவங்க என்ன அக்கா.. அப்படித்தான் கேப்பாங்க” என்று ஸ்போர்ட்டிவ்வாக ஆறுதல் சொன்னார் முத்து. 

BBTAMIL 8: DAY 79

டைனோசருக்கும் தன் குட்டி தங்கக்கட்டி என்கிற லாஜிக்கில் குடும்பத்தினர் அவர்களின் பிள்ளைகளுக்கு ஆதரவு தருவதுதான் இயல்பு. சிலர்தான் அதையும் மீறி இதுவொரு ‘கேம்’ என்பதையும் சூழல்தான் அவர்களை செயல்படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்வார்கள். அவர்களை விடவும் போட்டியாளர்களுக்குத்தான் இந்தப் புரிதல் அதிகமாக இருக்க வேண்டும். வருகிறவர்களின் ஃபீட்பேக்கை அவர்கள் தெர்மாமீட்டர் போல பயன்படுத்தலாமே ஒழிய ஊசியாக நினைத்து அஞ்சக்கூடாது.  குறிப்பாக ரயானின் அக்கா இன்று செய்தது சூறாவளியான கலவரம். 

அடுத்த எபிசோடில் எந்தெந்த குடும்பத்தினர் வந்து சுவாரசியப்படுத்துகிறார்கள் என்று பார்க்கலாம். சவுந்தர்யாவின் குடும்பத்தினர் வரும் போது எல்லோருக்கும் பப்ஸ் கிடைக்கும் என்பது மட்டும் நிச்சயம். 

Bigg Boss Tamil 8: "அதுதான் அன்ஷித்தா..." - சம்மந்தியை அனைவருக்கும் ஊட்டிய அன்ஷித்தாவின் தாய்!

பிக் பாஸ் வீட்டில் ஃபிரீஸ் டாஸ்க் தொடங்கிவிட்டது.போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் வீட்டிற்குள் வந்து மற்ற போட்டியாளர்களுடனான கருத்து முரண்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தின... மேலும் பார்க்க

BB Tamil 8: 'பின்னாடி பேசக்கூடாது...' - சவுந்தர்யாவின் பெற்றோர் சொன்ன அறிவுரை

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் 'freeze' டாஸ்க் ஆரம்பமாகிவிட்டது.நேற்று தீபக், மஞ்சரி, விஷால், ரயானின் குடும்பத்தினர் வந்து சர்ப்ரைஸ் கொடுத்திருந்தனர். விஷால் மற்றும் அவரின் அப்பாவின் சந்திப்பு அதிக நெகி... மேலும் பார்க்க

'குக்கு வித் கோமாளி'யின் டைட்டில் மாறுகிறதா?' - பின்னணி என்ன?

விஜய் டிவியின் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக்கு வித் கோமாளி. சின்னத்திரை, சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள, சமையலை ஜாலி கேலியுடன் அணுகும் இந்த நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று சொல... மேலும் பார்க்க

BB Tamil 8: ``அருண் தீபக்கை அப்படி சொன்னது என்ன ரொம்ப காயப்படுத்திருச்சு..." - தீபக் மனைவி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 79-வது நாளுக்கான நான்காவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்க்கும் ப்ரீஸ் டாஸ்க் நடக்க இர... மேலும் பார்க்க

BB Tamil 8 : `மஞ்சரியின் பார்ட்னருமே பிக்பாஸ் வீட்டு வாசல் வரை வந்தார், ஆனா.!' - பிரேம் டாவின்சி

பிக்பாஸ் சீசன் 8 நிறைவடைய இன்னும் இரு வாரங்களே இருக்கும் சூழலில், பல ட்விஸ்டுகளை அரங்கேற்ற ஆயத்தமாகி விட்டார் பிக்பாஸ். மிட் வீக் எவ்பிக்‌ஷன், பணப்பெட்டி டாஸ்க் என வரிசையாக நிகழவிருக்கும் சூழலில் போட... மேலும் பார்க்க

BB Tamil 8: 'அப்பா ஏம்மா வரல...' - கலங்கிய விஜே விஷால்; சர்ப்ரைஸ் கொடுக்கும் பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 79-வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். கடந்த வாரம் நாமினேட... மேலும் பார்க்க