BB Tamil 8: 'பின்னாடி பேசக்கூடாது...' - சவுந்தர்யாவின் பெற்றோர் சொன்ன அறிவுரை
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் 'freeze' டாஸ்க் ஆரம்பமாகிவிட்டது.
நேற்று தீபக், மஞ்சரி, விஷால், ரயானின் குடும்பத்தினர் வந்து சர்ப்ரைஸ் கொடுத்திருந்தனர். விஷால் மற்றும் அவரின் அப்பாவின் சந்திப்பு அதிக நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 'ஃபைனல் போவது கஷ்டம்தான்' என ஒரு மினி சுனாமியை சைலன்ட்டாக ஏற்படுத்தி விட்டார், ரயானின் அக்கா. “டெவிலா இருக்கப்ப பயந்தியா?' என மஞ்சரி கேட்க, 'இல்ல நீ என் அம்மா, எப்பவும் அழகுதான்' என நெகிழ்ச்சியாகப் பதில் சொன்னார் மஞ்சரியின் மகன். எல்லோரும் போட்டியாளர்களின் நிறை குறைகளையும் சுட்டிக் காட்டிச் சென்றனர்.
இந்நிலையில் இன்று ராணவ், சவுந்தர்யாவின் குடும்பத்தினர் வந்திருக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளன. ராணவ் காயம் பட்ட சம்பவத்தில் ராணவ் நடிப்பதாகச் சொன்ன சவுந்தர்யாவின் செயலைத் தவறு என வெளிப்படையாகச் சுட்டிக் காட்டி பேசியிருந்தார் ராணவ்வின் சகோதரி. அருணுக்கு நன்றி சொன்னார் ராணவ்வின் தந்தை. இதையடுத்து வெளியாகியிருக்கும் இரண்டாவது ப்ரோமோவி சவுந்தர்யாவின் குடும்பத்தினர், சவிந்தர்யாவின் குறைகளைச் சுட்டிக் காட்டி, 'பின்னாடி பேசக் கூடாது', 'நிறைய திருத்திக்க வேண்டும்' என அறிவுரைகளை வழங்கியுள்ளனர். நேற்றைய எபிசோடில் அருண் அடுத்தடுத்து அடிவாங்கியிருந்தார். இன்றைய 80வது நாள் எபிசோடில் அருணை டிசார்ஜ் செய்துவிட்டு, சவுந்தர்யாவை அட்மிட் செய்துள்ளனர். என்ன நடக்கிறது என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.