Christmas: கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு மதுரை தூய மரியன்னை ஆலயத்தில் சிறப்பு த...
BB Tamil 8: ``அருண் தீபக்கை அப்படி சொன்னது என்ன ரொம்ப காயப்படுத்திருச்சு..." - தீபக் மனைவி
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 79-வது நாளுக்கான நான்காவது புரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்க்கும் ப்ரீஸ் டாஸ்க் நடக்க இருக்கிறது. இன்று வெளியான ப்ரோமோவில் தீபக், மஞ்சரி, விஜே விஷால் குடும்பத்தினர் வந்திருந்தனர். பல நெகிழ்வான தருணங்கள் இருந்தன.
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் நான்காவது புரோமோவில், இந்த வீட்டில் இருக்கும் யார் மீதாவது உங்களுக்கு முரண்பாடு இருந்தால் தெரியப்படுத்துங்கள் என்று பிக் பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினரிடம் கேட்கிறார். அப்போது 'மஞ்சரிக்கு ஏன் விஜே விஷாலைப் பிடிக்க மாட்டிங்குது' என்று விஜே விஷாலின் அப்பா கேட்கிறார்.
'எனக்கு ஒரு ப்ளேயராதான் விஜே விஷாலைப் பிடிக்காது. மற்றப்படி அவரைப் பிடிக்கும்' என்கிறார் மஞ்சரி. 'கேம்னு வந்தால் அது கேம்தான் நீங்க ஏன் கேம தாண்டி முடிச்சப்பிறகும் கோபமா இருக்கீங்க'என்று மஞ்சரின் தங்கச்சி அன்ஷிதாவைக் கேட்கிறார்.
இதனைத்தொடர்ந்து பேசிய தீபக்கின் மனைவி,' அருண் தீபக் பத்தி பேசியபோதும், அவரின் கேரக்டரைத் தவறாகப் பேசியபோதும் அது என்னை மிகவும் காயப்படுத்தியது' என்றார். ரயானின் அக்கா, ' எனது தம்பி நாமினேஷன் ப்ரீ பாஸ் வாங்கும்போது அது மஞ்சரிக்கும், முத்துக்குமரனுக்கும் புடிக்கவே இல்ல' என்றார். இப்படி இந்த இந்த ப்ரீஸ் டாஸ்க் விறுவிறுப்பாக இருக்கிறது. இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.