செய்திகள் :

Bigg Boss Tamil 8: பணப்பெட்டியை எடுக்கப்போவது இவரா? முன்னரே திட்டமிட்ட போட்டியாளர்

post image
பிக் பாஸ் சீசன் 8, 75 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் பதினெட்டு பேர், பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் 6 பேர் என 24 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அடுத்தடுத்த எவிக்‌ஷன் மூலம் ரவீந்தர், சுனிதா, அர்னவ், வர்ஷினி வெங்கட், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டனர்.

கடந்த வாரம் ரஞ்சித் வெளியேறிவிட்டார் தற்போது ராணவ், ரயான், சௌந்தர்யா, ஜாக்குலின், மஞ்சரி, முத்துக்குமரன் உள்ளிட்ட 12 பேர் நிகழ்ச்சியில் தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கிளைமேக்ஸை நெருங்கி விட்ட சூழலில் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து நடக்க இருக்கும் ட்விஸ்டுகள் அதிரடிகள் குறித்து நிகழ்ச்சி தொடர்புடையோர் மற்றும் போட்டியாளர்களூக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.

''பொதுவாக பிக் பாஸ் சீசனில் கடைசிக்கட்டத்துலதான் அதிரடிகள், ட்விஸ்ட்டுகளை நிகழ்த்துவாங்க. இந்த சீசன்ல இப்ப மிச்சமிருக்கிற போட்டியாளர்களில் பெண்கள்தான் குறைவான எண்ணிக்கையில் இருக்காங்க. வரும் பொங்கல் பண்டிகையோடு நிகழ்ச்சி முடிய இருக்கிற சூழலில், வரும் வார எவிக்‌ஷன் எப்படியிருக்கும், மிட் வீக் எவிக்‌ஷன் இருக்குமா, பணப்பெட்டி எப்போ வைப்பாங்கன்னு பல கேள்விகள் ரசிகர்கள்கிட்ட இருக்கு.

அன்ஷிதா, முத்துக்குமரன்

இப்ப நிகழ்ச்சி 80 வது நாளை நெருங்கிடுச்சு. ஒவ்வொரு சீசன்லயும் ஒரு குறிப்பிட்ட தொகையை வச்சு 'எடுத்துட்டு வெளியேற விரும்பும் போட்டியாளர் எடுத்துட்டுப் போகலாம்'னு ஒரு வாய்ப்பு தருவாங்க இல்லையா, இந்த சீசன்ல 90 வது நாளுக்குப் பிறகு அதைச் செய்வாங்கனு சொல்றாங்க'' என்கின்றனர் இவர்கள்.

இப்படியிருக்க, நிகழ்ச்சியில் பணப்பெட்டி வைக்கப்படும் பட்சத்தில் தற்போது பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களில் நடிகை அன்ஷிதா அதை எடுக்க ரொம்பவே வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. தன் நெருங்கிய நட்பு வட்டத்தில் இது குறித்துப் பேசிவிட்டே நிகழ்ச்சிக்குள் சென்றிருந்தாராம் அவர்.

அன்ஷிதா

``சில பர்சனல் பிரச்னைகளால் மீடியாவுல ரொம்பவே பேர் அடிபட்டுடுச்சு. அதையெல்லாம் கடந்து நிகழ்ச்சிக்குள் நான் இருந்தேன்னா அதுவே பெரிய அதிர்ஷ்டம்தான். ஒருவேளை பணப்பெட்டி வைக்கிற வரைக்கும் ஷோவுல இருந்தேன்னா, அந்தக்கட்டத்துக்கு மேல ரிஸ்க் எடுக்கறது நல்லதில்ல. அதனால டைட்டில் பத்தியெல்லாம் யோசிக்கல. பணப்பெட்டி டாஸ்க்கில் என் முழு கவனம் இருக்கும்' எனச் சொல்லியே சென்றாராம் இவர்.

பணப்பெட்டி டாஸ்க்கில் அன்ஷிதா பெட்டியை எடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

'குக்கு வித் கோமாளி'யின் டைட்டில் மாறுகிறதா?' - பின்னணி என்ன?

விஜய் டிவியின் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக்கு வித் கோமாளி. சின்னத்திரை, சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள, சமையலை ஜாலி கேலியுடன் அணுகும் இந்த நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று சொல... மேலும் பார்க்க

BB Tamil 8: ``அருண் தீபக்கை அப்படி சொன்னது என்ன ரொம்ப காயப்படுத்திருச்சு..." - தீபக் மனைவி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 79-வது நாளுக்கான நான்காவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்க்கும் ப்ரீஸ் டாஸ்க் நடக்க இர... மேலும் பார்க்க

BB Tamil 8 : `மஞ்சரியின் பார்ட்னருமே பிக்பாஸ் வீட்டு வாசல் வரை வந்தார், ஆனா.!' - பிரேம் டாவின்சி

பிக்பாஸ் சீசன் 8 நிறைவடைய இன்னும் இரு வாரங்களே இருக்கும் சூழலில், பல ட்விஸ்டுகளை அரங்கேற்ற ஆயத்தமாகி விட்டார் பிக்பாஸ். மிட் வீக் எவ்பிக்‌ஷன், பணப்பெட்டி டாஸ்க் என வரிசையாக நிகழவிருக்கும் சூழலில் போட... மேலும் பார்க்க

BB Tamil 8: 'அப்பா ஏம்மா வரல...' - கலங்கிய விஜே விஷால்; சர்ப்ரைஸ் கொடுக்கும் பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 79-வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். கடந்த வாரம் நாமினேட... மேலும் பார்க்க

BB Tamil 8: `ஏன்னா நீ என் அம்மா!' - மகனின் வார்த்தைகளால் நெகிழ்ந்த மஞ்சரி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 79-வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.இந்த வாரம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஃப்ரீஸ் டாஸ்க் நடக்கவுள்ளது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பம் மற்றும் நண்... மேலும் பார்க்க

BB Tamil 8: "எனக்கு எதுவும் புரியல; நான் இங்க..." - மனைவியிடம் கண் கலங்கிய தீபக்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 79-வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். கடந்த வாரம் நாமினேட் ஆக... மேலும் பார்க்க