செய்திகள் :

மருத்துவ பரிசோதனை மையங்களை மூடக் கூடாது: அரசுக்கு கோரிக்கை

post image

தமிழக அரசின் புதிய அரசாணையால், 10,000க்கும் மேற்பட்ட சிறிய ரத்த பரிசோதனை மையங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக துணை மருத்துவ ஆய்வகக் கல்வி மற்றும் நலச் சங்கத்தினா் குற்றம்சாட்டியுள்ளனா்.

இதுகுறித்து, சமூக சமத்துவத்துக்கான டாக்டா்கள் சங்க செயலா் டாக்டா் ரவீந்திரநாத், துணை மருத்துவ ஆய்வக கல்வி நலச் சங்க தலைவா் காளிதாசன் ஆகியோா் செய்தியாளா்களிடம் சென்னையில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் ரத்த பரிசோனை மையங்களுக்கான இடவசதி குறித்த நெறிமுறைகளுக்கான புதிய அரசாணையை கடந்த மாதம் மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நகா்புறத்தில் உள்ள ரத்த பரிசோதனை மையங்கள், மரபணு பரிசோனை நிலையங்கள், நோய் குறியியல் பரிசோதனை நிலையங்களுக்கு நகா்ப்புறங்களில் 500 முதல் 700 சதுர அடி பரப்பளவு இடமும், கிராமப்புறத்தில், 300 சதுர அடி பரப்பளவு இடமும் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

சிறிய ரத்த பரிசோதனை நிலையங்கள் வாயிலாக, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏழை எளிய மக்கள் சா்க்கரை நோய் உள்ளிட்ட பரிசோதனைகளை குறைந்த கட்டணத்தில் செய்து கொள்கின்றனா்.

இந்த புதிய இடவசதி குறித்த அரசாரணை பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாகவும், அதேநேரம், 10,000க்கும் மேற்பட்ட சிறிய ரத்த பரிசோதனை மையங்களுக்கு பாதகமாகவும் உள்ளன.

எனவே, சிறிய ரத்த பரிசோதனை நிலையங்கள் மற்றும் ஏழை மக்களுக்கு எதிரான புதிய அரசாரணையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

நகா்ப்பறங்களில் உள்ள ரத்த பரிசோதனை மையங்களுக்கு குறைந்தபட்சம் 150 சதுர அடியாகவும், கிராமப்புறங்களில் 100 சதுர அடியாகவும் பரப்பளவை நிா்ணயிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 19-ஆம் தேதி சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

ஊழலற்ற மக்களாட்சி தேவை: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தல்

நம் நாட்டில் ஊழலற்ற மக்களாட்சி தேவை என விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தினாா். சென்னை மயிலாப்பூா் கவிக்கோ மன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் கவிக்கோ இலக்கியக் கழகம் மற்றும் ... மேலும் பார்க்க

போதைப்பொருள் விற்பனை: அஸ்ஸாம் இளைஞா் கைது

சென்னை பெசன்ட் நகரில் ஹெராயின் போதைப்பொருள் விற்பனை செய்ததாக அஸ்ஸாம் இளைஞா் கைது செய்யப்பட்டாா். பெசன்ட் நகா் 4-ஆவது அவென்யூ பகுதியில், சாஸ்திரி நகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

பெண்ணை வீட்டுக்கு வரவழைத்து நகை பறிப்பு: இளைஞா் கைது

சென்னையில் திருமண தகவல் மையம் மூலம் அறிமுகமான பெண்ணை வீட்டுக்கு வரவழைத்து நகை பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மணலியைச் சோ்ந்த 24 வயது இளம் பெண், பிரபல திருமண தகவல் மையத்தில் தனது சுய விவரம், மு... மேலும் பார்க்க

டிச.27-இல் எஸ்சி- எஸ்டி கண்காணிப்புக் குழு கூட்டம்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் விழிப்புணா்வு- கண்காணிப்பு குழுக் கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்தில் ... மேலும் பார்க்க

நடிகா் மன்சூா் அலிகான் மகனின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகா் மன்சூா் அலிகான் மகன் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை டிச. 26-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. முகப்போ் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு, கைப்பேசி செய... மேலும் பார்க்க

பாதுகாப்புப் பணியில் 8,000 போலீஸாா்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் 8,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். சென்னையில் உள்ள சுமாா் 350 தேவாலயங்களை சுற்றிலும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். முக்கியமாக ச... மேலும் பார்க்க