12 வயது சிறுமி கொலை! முக்கிய குற்றவாளி கைது!
மகாராஷ்டிர மாநில தாணேவில் 12 வயது சிறுமியைக் கடத்தி கொலை செய்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
தாணே மாவட்டத்தின் கல்யான் பகுதியில், கடந்த திங்களன்று (டிச.23) வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுமி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
பின்னர், சிறுமி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று (டிச.24) காலை 10 மணியளவில் அம்மாவட்டத்திலுள்ள பிவாண்டி எனும் ஊரின் மயானத்தின் சுவற்றின் அருகில் காணாமல்போன சிறுமியின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டது.
பின்னர், காவல்துறையினர் அச்சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக பதிவுச் செய்யப்பட்டது, விசாரணை நடைபெற்று வந்தது.
சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டதிற்கான காரணம் தெரியாத நிலையில், அவர் பாலியல் வன்புணர்வு ஏதேனும் செய்யப்பட்டரா என்று உடற்கூராய்வின் அறிக்கை வெளியான பின்னரே தெரியவரும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க: கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு! 5 மருத்துவர்கள் இடைநீக்கம்!
இதனைத் தொடர்ந்து, குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி வாயில் கருப்புத் துணியை கட்டி நூற்றுக்கணக்கானோர் கிழக்கு கல்யான் நகர் பகுதியில் பேரணியில் ஈடுப்பட்டனர்.
முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த சிறுமியை ஒரு நபர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால், அவரை பிடித்து விசாரித்தபோது தற்போது சிறுமி காணாமல் போனதற்கு அவர் காரணமில்லை எனத் தெரியவந்தது.
இந்நிலையில், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் புல்தான மாவட்டதைச் சேர்ந்த விஷால் கவுலி (வயது-35) என்ற நபரை இன்று காலை அம்மாநில காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் அவருக்கு உதவியதாக அவரது மனைவி சாக்ஷி கவுலி (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த குற்றச் செயலுக்கு பயண்படுத்தப்பட்ட அட்டோவும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட விஷால் கவுலி ஏற்கனவே பதிவுச் செய்யப்பட்ட குற்றவாளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு இந்த சம்பவத்தில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.