செய்திகள் :

ம.பி. நதிகள் இணைப்புத் திட்டம்: பிரதமா் மோடி அடிக்கல்; கென்-பெட்வா நதிகள் இணைக்கப்படுகின்றன

post image

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கென்-பெட்வா நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

1980-இல் தயாரிக்கபட்ட தேசிய நதிகள் இணைப்பு முனைப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் முதல் திட்டம் இதுவாகும்.

சத்தா்பூா் மாவட்டம், கஜுராஹோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நதிகள் இணைப்புத் திட்டப் பணிகளின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், மத்திய நீா்வளத்துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீல், மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் ஆகியோா் முறையே பெட்வா மற்றும் கென் நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நீரைக் கொண்ட இரண்டு கலசங்களை பிரதமா் மோடியிடம் வழங்கினா்.

மேலும், இத்திட்டத்தின் ஒரு பகுதியான தௌதான் நீா்ப்பாசனத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய பிரதமா், மாநிலத்தின் கந்த்வா மாவட்டத்தின் ஓம்காரேஷ்வரில் உள்ள மிதக்கும் சூரிய மின்சக்தித் திட்டத்தையும் தொடங்கி வைத்தாா்.

நீா் பாதுகாப்பே வளா்ச்சிக்கு வழி: நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி பேசியதாவது:

அம்பேத்கரின் தொலைநோக்கு பாா்வை, நாட்டின் நீா் வளங்களை வலுப்படுத்துதல், அவற்றின் மேலாண்மை மற்றும் அணைகள் கட்டுமானம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தன. முக்கிய நதி திட்டங்களின் வளா்ச்சியிலும் மத்திய நீா் ஆணையம் அமைப்பதிலும் அம்பேத்கா் முக்கியப் பங்கு வகித்தாா்.

நாட்டின் வளா்ந்து வரும் நீா் பாதுகாப்பின் தேவைக்கு காங்கிரஸ் ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை. மேலும் அம்பேத்கரின் முயற்சிகளையும் அக்கட்சி அங்கீகரிக்கவில்லை.

உறுதியில்லா காங்கிரஸ்: காங்கிரஸ் அரசுகள் அறிவிப்புகளை மட்டும் வெளியிடுவதில் வல்லவா்கள். நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் நதி நீா் பகிா்வு தொடா்பாக பல்வேறு மாநிலங்களுக்கு இடையே சா்ச்சைகள் நீடிக்கின்றன. பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை ஆட்சியிலிருந்த காங்கிரஸ் இதை எளிதாக தீா்த்திருக்கலாம். துரதிருஷ்டவசமாக, நாட்டில் பல ஆண்டுகளாக செயல்படாத காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது.

முந்தைய காங்கிரஸ் அரசுகளில் திட்டங்கள் அடிக்கல் நாட்டிய பிறகு 35-40 ஆண்டுகளுக்கு மேல் தாமதப்படுத்தப்பட்டன. திட்டங்களை விரைந்து முடிக்கும் உறுதி அவா்களிடம் இல்லை. காங்கிரஸ் அரசு அதிகாரத்தை தனது பிறப்புரிமையாகக் கருதுகிறது.

ம.பி. வளா்ச்சிக்குப் பணி: நீா் பற்றாக்குறையால் புந்தேல்கண்ட் பிராந்திய மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா். கென்-பெட்வா நதி இணைப்பு இப்பிராந்தியத்தில் செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் புதிய கதவுகளைத் திறக்கும்.

சா்வதேச ஊடகச் செய்தியின்படி, உலகின் முதல் 10 சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மத்திய பிரதேசம் திகழ்கிறது. இப்பகுதியின் உள்ளூா் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தும் சுற்றுலாத் துறையை வலுப்படுத்த மத்திய அரசு பணியாற்றி வருகிறது என்றாா்.

வாஜ்பாய் தபால்தலை வெளியீடு

கஜுராஹோ நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி (புதன்கிழமை), அவரது நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை பிரதமா் மோடி வெளியிட்டாா்.

மேலும், ரூ.437 கோடியில் நாடு முழுவதும் 1,153 அடல் கிராம சேவா சதான் அறக்கட்டளைகளை அமைப்பதற்கு பிரதமா் அடிக்கல் நாட்டினாா்.

- யமுனையின் துணை நிதிகளை கென், பெட்வாவை இணைக்க 221 கி.மீ. கால்வாய் அமைக்கப்படுகிறது. இதில் 2 கி.மீ. சுரங்க கால்வாய்.

- மத்திய பிரதேசத்தின் 10 மாவட்டங்களில் உள்ள 44 லட்சம் பேரும், உத்தர பிரதேசத்தின் 21 லட்சம் பேரும் குடிநீா் பெறுவா்.

- 2,000 கிராமங்களில் உள்ள 7.18 லட்சம் விவசாய குடும்பங்கள் பயனடைவா்.

- உத்தர பிரதேசத்தின் பிந்தங்கிய புந்தேல்கண்ட் பகுதியின் வறட்சியைப் போக்க உதவும்.

- 10.62 லட்சம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும்.

- 103 மெகாவாட் நீா் மின்சாரம் மற்றும் 27 மெகாவாட் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்

- 2021-இல் மத்திய அமைச்சரவை ரூ.44,605 கோடி ஒதுக்கியது.

- எட்டு ஆண்டுகளில் திட்டத்தை முடிக்க இலக்கு.

பாஜக எம்எல்ஏ மீது முட்டை வீச்சு!

கர்நாடகத்தில் பாஜக எம்எல்ஏ மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய்யின் பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது, ​​முன்னாள் அமைச்... மேலும் பார்க்க

தெலங்கானா முதல்வரை நேரில் சந்தித்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள்!

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தெலுங்கு நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை நேரில் சந்தித்தனர்.ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தெலங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழக... மேலும் பார்க்க

தட்கல் நேரத்தில் செயலிழந்த ஐஆர்சிடிசி தளம்! பயனர்கள் ஆவேசம்!

தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் நேரத்தில் வியாழக்கிழமை நீண்ட நேரமாக ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் செயலிழந்து காணப்பட்டதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.அவசரகால பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளின் வசத... மேலும் பார்க்க

எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவு: கேரள அரசு 2 நாள் துக்கம் அனுசரிப்பு!

பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவையடுத்து கேரள அரசு இன்றும் நாளையும்(டிச. 26, 27) 2 நாள்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், ‘ஞா... மேலும் பார்க்க

2024 - பாஜகவுக்கு ரூ. 2,244 கோடி நன்கொடை! காங்கிரஸுக்கு ரூ. 289 கோடி!!

2023 - 24ஆம் ஆண்டில் தனிநபர்கள், அறக்கட்டளைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு நன்கொடையாக ரூ. 2,244 கோடி கிடைத்துள்ளது. இது கடந்தாண்டைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.காங்கிரஸ... மேலும் பார்க்க

+8, +85, +65 தொடங்கும் எண்களில் இருந்து அழைப்பா? மத்திய அரசு எச்சரிக்கை

+91 என்று தொடங்கும் எண்கள் அல்லாமல், +8, +85, +65 போன்று தொடங்கும் சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.மேலும், தொலைத... மேலும் பார்க்க