வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... எஸ்பிஐ வங்கியில் 13,735 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
நாடு முழுவதும் பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 13,735 வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவின் ஜூனியர் அசோசியேட்ஸ் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கும் மொத்தம் 340 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதிம் ஆர்வம் உள்ளவர்களிடம் வரும் 2025 ஜனவரி 7 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Junior Associates
காலியிடங்கள்: 13,735 (தமிழகம் - 336, புதுச்சேரி-4)
வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும். 2.4.1996 தேதிக்கு முன்பும் 1.4.2004-க்கு பின் பிறந்திருக்கக்கூடாது.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
என்எல்சி நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு தகுதித் தேர்வு கிடையாது. மதிப்பெண் சான்றிதழை சரிபார்ப்புக்கு பின்பு இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.24,050 - ரூ.64,480 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://bank.sbi/web/careers/current-openings அல்லது https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதளத்தில் உள்ள (Recruitment of Junior Associates 2024) என்ற லிங்கில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி,எஸ்டி. மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.750 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.1.2024