செய்திகள் :

ஓஎம்ஆர் முறையிலேயே குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு!

post image

கணினி வழியில் நடத்த இருந்த குரூப் 2ஏ முதன்மைத் தேர்வை ஓஎம்ஆர் முறையிலேயே நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) முடிவு செய்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,540 குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த செப்டமர் 14 ஆம் தேதி நடத்தப்பட்டது.

இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 7,93,966 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5.83,467 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியானது.

முதன்மைத் தேர்வு

முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், குரூப் 2 மற்றும் பணிகளுக்கு தனி முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படும். இதில், குரூப் 2ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வு இரண்டு தாள்கள் கொண்டது. முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது பேப்பர், பேனா முறையில் நடத்தப்படும். கொள்குறி வகை கேள்விகள் கொண்ட இரண்டாம் தாள் கணினி வழித்தேர்வாக நடத்தப்படும் என தேர்வாணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அண்மையில், கணினி வழியில் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான தேர்வில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் சில தேர்வர்களால் தேர்வினை முழுமையாக முடிக்க இயலவில்லை. இதையடுத்து தேர்வர்களின் கோரிக்கையினை முறையாக பரிசீலநை செய்து, அதனை ஏற்று மேற்கண்ட பதவிக்காக டிச.14 ஆம் தேதி பிற்பகல் நடைபெற்ற கணினிவழித் தேர்வினை தேர்வாணையம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் ஏற்கனவே இந்த தேர்விற்காக தேர்வாணையத்தால் அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கான மறுத்தேர்வு டிச.22 ஆம் தேதி ஒளிக்குறி உணரி(ஓஎம்ஆர்) முறையில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |சென்னை உயர்நீதிமன்றத்தில் டெக்னிக்கல் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்த நிலையில், அண்மையில், கணினி வழியில் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான தேர்வில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் தேர்வு ரத்தான நிலையில், குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், தேர்வினை

ஒளிக்குறி உணரி(ஓஎம்ஆர்) முறையிலேயே நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.

பாடத்திட்டம் மாற்றியமைப்பு

மேலும், தேர்வர்களின் நலன் கருதியும் அரசுத் துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்‌ தேர்வு-II (தொகுதி II மற்றும் IIA பணிகள்‌)-க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்‌ தேர்வு-IV (தொகுதி IV பணிகள்‌)-க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றியமைக்கப்பட்டு https://tnpsc.gov.in/tamil/syllabus.html மற்றும் https://tnpsc.gov.in/english/syllabus.html என்ற தேர்வாணைய இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

8,997 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு!

சத்துணவுத் திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்திட, தற்போது காலியாக உள்ள மொத்த பணியிடங்களில் அவசர அவசியம் கருதி, 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட சமூக நலத்துறை ... மேலும் பார்க்க

சென்னை உயர்நீதிமன்றத்தில் டெக்னிக்கல் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 75 டெக்னிக்கல் பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் வரும் 23 ஆம் தேதிக்குள் ஆ... மேலும் பார்க்க

அரசு உதவி வழக்குரைஞா் தோ்வு ரத்து: டிச. 22-இல் மறு தோ்வு

சென்னை: கணினி வழியாக நடைபெற்ற அரசு உதவி வழக்குரைஞா் தோ்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. மறுதோ்வு வரும் 22-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்வாணையத்தின் தோ்வு... மேலும் பார்க்க

குரூப் 2 முதன்மைத் தோ்வு: சான்றுகளை பதிவேற்ற நாளை கடைசி

சென்னை: குரூப் 2 முதன்மைத் தோ்வுக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய புதன்கிழமை (டிச. 18) கடைசி நாளாகும். இதற்கான நினைவூட்டலை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. குரூப் 2 மற்றும் 2ஏ ... மேலும் பார்க்க

திருவாரூரில் டிச.20 இல் தனியாா் வேலை வாய்ப்பு முகாம்

திருவாரூா்: திருவாரூரில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் டிச.20- ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் மாவட்ட... மேலும் பார்க்க

சவூதி அரேபிய அமைச்சகத்தில் பணி: மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சவூதி அரேபிய அமைச்சகத்தில் பணியாற்ற விருப்பம் உள்ள மருத்துவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், சவூதி அரேபிய அமைச்சகத்தின் அரசு... மேலும் பார்க்க