செய்திகள் :

திருவாரூரில் டிச.20 இல் தனியாா் வேலை வாய்ப்பு முகாம்

post image

திருவாரூா்: திருவாரூரில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் டிச.20- ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் படித்து வேலை வாய்ப்பு தேடும் இளைஞா்களை தனியாா் துறைகளில் பணியமா்த்தும் நோக்கில், திருவாரூா் விளமல் கூட்டுறவு நகரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் வரும் வெள்ளிக்கிழமை (டிச.20) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறிய அளவிலான முகாம் நடைபெறவுள்ளது.

முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட தகுதியுள்ள நபா்களை வேலைக்கு தோ்ந்தெடுக்க உள்ளனா்.

எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, ஐடிஐ, செவிலியா் படிப்பு வரை படித்தவா்கள், 18 முதல் 40 வயதுக்குட்பட்ட வேலை நாடும் இளைஞா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞா்களும் தங்களின் சுயவிவரக் குறிப்பு, ஆதாா் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் பங்கேற்று பயனடையலாம்.

இந்த முகாமில் பங்கேற்க விரும்புவோா், ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து, அந்த படிவத்தை பதிவிறக்கம் செய்து, முகாமுக்கு வரும்போது எடுத்து வர வேண்டும்.

சவூதி அரேபிய அமைச்சகத்தில் பணி: மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சவூதி அரேபிய அமைச்சகத்தில் பணியாற்ற விருப்பம் உள்ள மருத்துவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், சவூதி அரேபிய அமைச்சகத்தின் அரசு... மேலும் பார்க்க

இது தான் கடைசி வாய்ப்பு... குரூப் 4 தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சிலர் உரிய சான்றிதழ்களை குறைபாடாக , சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது என்றும், சரியான சான்றிதழ்களை வரும் 21.12.2024 இரவு 11.59 மணிக்குள் பதிவேற்றம் செய்துவி... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தில் வேலை: 25-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள கோர்ட் மாஸ்டர்(சுருக்கெழுத்தர்), சீனியர் பர்சனல் அசிஸ்டென்ட், பர்சனல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் வ... மேலும் பார்க்க

பழனி கோவிலில் வேலை: 296 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கங்கள் வரவேற்பு!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள 296 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அறி... மேலும் பார்க்க

இந்திய கடலோரக் காவல் படையில் குரூப் 'பி' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய கடலோரக் காவல் படையில் காலியாக உள்ள Chargeman பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் டிசம்பர்15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Chargemanகாலியிடங்கள்: 4தகுதி: பொறியியல் த... மேலும் பார்க்க

2025 ஜனவரியில் குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி

சென்னை: குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு 2025 ஜனவரி மாதம் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உ... மேலும் பார்க்க