காங்கிரஸுக்கு ஒளியாய் இருந்து வழிகாட்டியவர் மன்மோகன் சிங்: சோனியா காந்தி
போக்சோ வழக்கில் இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் மாசிலாமணிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அா்ஜூன் (19). 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, திண்டுக்கல் தாலுகா போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் அா்ஜூனை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி பி.வேல்முருகன் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தாா். அதில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அா்ஜூனுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.