செய்திகள் :

'தலைவனாக வாழ்ந்து காட்டுவதே முக்கியம்': நல்லகண்ணுக்கு விஜய் வாழ்த்து!

post image

சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான இரா. நல்லகண்ணுவின் பிறந்த நாளுக்கு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

”அரசியலைத் தங்கள் அடையாளமாக ஆக்கிக் கொண்டவர்கள் மத்தியில், அரசியலுக்கே ஒரு தனித்த பெரும் அடையாளமாகத் திகழ்பவர், மரியாதைக்குரிய நல்லக்கண்ணு அய்யா.

சுதந்திரப் போராட்டக் களத்தில் நின்றவர். பிறகு பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். சிறைக் கொட்டடிகளைச் சிரித்துக்கொண்டே சிநேகித்தவர். தடைகளைத் தகர்த்த தனிப்பெரும் தளகர்த்தர்.

சாதிய வன்மத்திற்கு எதிராகக் களமாடியவர் மட்டுமன்று. வாழ்ந்து காட்டியவர். சமூக நீதியை, சமத்துவத்தை நிலைநாட்டியவர். தன் வாழ்நாள் முழுமைக்கும் அதை வாழ்ந்து காட்டியே நிரூபித்துக் கொண்டிருப்பவர். தமிழகத்தின் தனிப்பெரும் சமூக, அரசியல் அடையாளமாக உயர்ந்து நிற்பவர்.

இதையும் படிக்க: ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு இரா. நல்லகண்ணு பெயர்!

தங்களுக்கான நிதியை மட்டுமே திரட்டும் அரசியலாளர்கள் இடையே, தனக்குக் கிடைத்த நிதி அனைத்தையும் தான் சார்ந்த இயக்கத்திற்கும் விவசாயிகளுக்கும் அரசுக்கும் கொடுத்த உத்தமர்.

தலைவனாக வருவது முக்கியமன்று. தலைவனாக வாழ்ந்து காட்டுவதே முக்கியம் என்ற இலக்கணத்திற்கு இன்றுவரை ஒற்றை உதாரணம், நேர்மையின் ஊற்றுக்கண்ணான நல்லக்கண்ணு அய்யா மட்டுமே. அவரே, நம் தலைமுறைக்கான நேர்மையான அரசியல் பாதையாகவும் பாடமாகவும் திகழ்பவர்.

நூற்றாண்டு காணும் அவரைப் போற்றிப் புகழ்ந்து வணங்குவோம். அய்யாவின் உடல்நலம், மனநலம், சிந்தனை வளம் நீடித்து நிலைக்க இறைவனை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எங்களுக்கு எந்தக் கட்சி பாகுபாடும் கிடையாது: காவல் ஆணையர் அருண்

எங்களுக்கு எந்தக் கட்சி பாகுபாடும் கிடையாது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் செய்... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைப் பார்க்கலாம்.விஜய் பிரசாத், சார்லி உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குநர் அய்யப்பன் சுப்பிரமணி இயக்கத்தில் வெளியான ரூபன் திரைப... மேலும் பார்க்க

காதலை ஏற்க மறுத்த பெண் குத்திக்கொலை! கொலையாளி தற்கொலை முயற்சி!

அஸ்ஸாம் மாநிலத்தில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை குத்திக்கொலை செய்துவிட்டு, கொலையாளி தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். நஹ்ரொனி பாத் பகுதியில் மெளசுமி கோகொய் (வயது-27) என்ற பெண், இன்று (டிச.26) காலை 11 மணி... மேலும் பார்க்க

எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘ஞானபீடம்’ விருது பெற்ற புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் எம்.டி.வாசுதேவன் நாய... மேலும் பார்க்க

சொர்க்கவாசல் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான சொர்க்கவாசல் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்த படம் சொர்க்கவாசல். இதில், ... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் 5 பத்திரிக்கையாளர்கள் பலி!

காஸா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பாலஸ்தீனப் பத்திரிக்கையாளர்கள் பலியாகினர்.கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாததிலிருந்து காஸா பகுதிகளின் மீது இஸ்ரேல் தொடர்ந்து போர்தொடுத்து வருகின்றது. ... மேலும் பார்க்க