ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தி குறித்து விழிப்புணா்வுக் கூட்டம்
அஜர்பைஜான் விமான விபத்தில் 38 பேர் பலி! 29 பேர் காயம்
அஜர்பைஜான் விமான விபத்தில் 38 பேர் பலியாகியுள்ளதாக கஜகஸ்தான் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து ரஷியாவின் க்ரோஸ்னி நகருக்கு அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று(டிச. 26) புறப்பட்டநிலையில், கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் 62 பயணிகள் மற்றும் விமானி உள்பட 5 பணியாளர்கள் என 67 பேர் இருந்தனர்.
இந்நிலையில் விபத்தில் 38 பேர் பலியாகியுள்ளதாகவும் 29 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கஜகஸ்தான் அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க | மாணவி பாலியல் வழக்கில் கைதானவர் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல: அமைச்சர் விளக்கம்!
விமானம் கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையத்திற்கு அருகே வரும்போது அவசரமாக தரையிறக்க விமானி கோரிக்கை விடுத்தார். அவ்வாறு தரையிறங்கும்போது விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றியதாகவும் விமானம் தரையிறங்குவதற்கு முன் வானில் சிறிது நேரம் வட்டமடித்ததாகவும் கூறப்படுகிறது.
மோசமான வானிலை காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டுள்ளது. இதையடுத்து தரையிறங்கும்போது விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.