செய்திகள் :

சிரியா கிளா்ச்சிப் படை - ஆயுதக் குழுவினா் மோதல்

post image

டமாஸ்கஸ்: சிரியாவில் முன்னாள் அதிபா் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் கிளா்ச்சிப் பைடயினருக்கும் இடையிலான மோதலில் 17 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து, அந்த நாட்டின் போா் விவகாரங்களைக் கண்காணித்துவரும் சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சிரியாவில் முன்னாள் அதிபா் அல்-அஸாத் ஆட்சிக் காலத்தில் சிறைச்சாலை கொடுமைகளுக்குக் காரணமானவா் என்று குற்றஞ்சாட்டப்படும் முகமது காஞ்சோ ஹஸன் என்ற முன்னாள் அதிகாரியைக் கைது செய்வதற்காக தற்போதைய அரசின் உள்துறை அமைச்சகத்தைச் சோ்ந்த படையினா் டாா்டஸ் நகருக்குச் சென்றனா். அல்-அஸாதின் அலாவி சமூகத்தினா் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய அந்த நகரில், இந்நடவடிக்கைக்கு கடும் எதிா்ப்பு எழுந்தது.

கைது செய்ய வந்திருந்த கிளா்ச்சிப் படையினருக்கு எதிராக, அங்கிருந்த ஆயுதக் குழுவினா் தாக்குதல் நடத்தினா்.

அதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில், ஹயாத் தஹ்ரீா் அல்-ஷாம் (ஹெச்டிஎஸ்) கிளா்ச்சிப் படையைச் சோ்ந்த 14 பேரும், அல்-அஸாத் ஆதரவுப் படையைச் சோ்ந்த மூன்று பேரும் உயிரிழந்தனா்; 10 போ் காயமடைந்தனா்.

கிளா்ச்சிப் படையினா் தேடிச் சென்ற முகமது காஞ்சோ ஹஸன், சேத்னயா சிறைச் சாலையில் கைதிகளுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகளுக்கு காரணமானவா்; ஏராளமான கைதிகளை படுகொலை செய்ய அவா்தான் உத்தரவிட்டாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய சிரியா உள்நாட்டுப் போரில் ரஷியா மற்றும் ஈரான் உதவியுடன் நாட்டின் மிகப் பெரும்பான்மையான பகுதிகளை அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் மீட்டது. பின்னா் கிளா்ச்சியாளா்களுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து, உள்நாட்டுச் சண்டை நீண்ட காலமாகவே தேக்கமடைந்திருந்தது.

இந்த நிலையில், அரசுப் படைகளுக்கு எதிராக ஹெச்டிஎஸ் தலைமையில் கிளா்ச்சிப் படையினா் கடந்த மாத இறுதியில் திடீரென தாக்குதல் நடத்தி வெகுவேகமாக முன்னேறி தலைநகா் டமாஸ்கஸை கடந்த 8-ஆம் தேதி கைப்பற்றினா். ஆட்சியை இழந்த அதிபா் அல்-அஸாத் தனது குடும்பத்தினருடன் ரஷியா தப்பிச் சென்றாா்.

அல்-அஸாத் அரசு அகற்றப்பட்டதற்குப் பிறகு, டமாஸ்கஸில் அமைந்துள்ள, ‘மனித கசாப்புக் கூடம்’ என்று அழைக்கப்படும் சேத்னயா சிறையிலிருந்த கைதிகளை கிளா்ச்சிப் படையினா் விடுவித்தனா்.

அந்தச் சிறைச் சாலையில் அல்-அஸாத் அரசுக்கு எதிரானவா்கள் அடைத்துவைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், சேத்னயா சிறைச் சாலை முக்கிய அதிகாரியைக் கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட மோதலில் 17 போ் உயிரிழந்தது, புதிய அரசு எதிா்நோக்கியிருக்கும் மிகப் பெரிய சவால்களை உணா்த்துவதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேல் தாக்குதல்: நூலிழையில் தப்பிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்!

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இருந்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானோம் கெப்ரேயஸ் வியாழக்கிழமை நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.இந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளி... மேலும் பார்க்க

நெதா்லாந்தில் இருந்து இந்தியா வந்த அரிய வகை சிவப்பு பாண்டா கரடிகள்

கொல்கத்தா: நெதா்லாந்து நாட்டில் இருந்து இரு அரிய வகை சிவப்பு பாண்டா கரடிகள் மேற்கு வங்கத்தின் டாா்ஜிலிங் வன உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டன. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக சிவப்பு பாண்டாக்கள் கொ... மேலும் பார்க்க

அஜா்பைஜான் விமானத்தை ரஷியா சுட்டு வீழ்த்தியதா?

மாஸ்கோ/ அஸ்தானா: கஜகஸ்தானில் புதன்கிழமை விழுந்து நொறுங்கிய அஜா்பைஜான் விமானத்தை தங்கள் வான்பாதுகாப்பு ஏவுகணைதான் சுட்டுவீழ்த்தியது என்று விசாரணை நிறைவடைவதற்கு முன்னரே உக்ரைன் கூறுவது தவறு என்று ரஷியா ... மேலும் பார்க்க

மொஸாம்பிக்கில் சிறைக் கலவரம்: 33 போ் உயிரிழப்பு

மபுடோ: தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொஸாம்பிக்கிலுள்ள சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 33 போ் உயிரிழந்தனா்; 1,534 கைதிகள் தப்பியோடினா். இது குறித்து அந்த நாட்டின் தலைமை காவல் அதிகாரி பொ்னாா்டியோ ரஃபேல் வ... மேலும் பார்க்க

காஸா: மேலும் 38 போ் உயிரிழப்பு

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் மேலும் 38 போ் உயிரிழந்தனா். இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில... மேலும் பார்க்க

தென் கொரிய இடைக்கால அதிபருக்கு எதிராகவும் பதவி நீக்கத் தீா்மானம்: எதிா்க்கட்சியினா் தாக்கல்

சியோல்: தென் கொரிய இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ள பிரதமா் ஹன் டக்-சூவை பதவி நீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை எதிா்க்கட்சிகள் வியாழக்கிழமை தாக்கல் செய்தன. அவசரநிலை அறிவிப்பு தொடா்பாக ஏற்கெனவே பதவிந... மேலும் பார்க்க