செய்திகள் :

தென் கொரிய இடைக்கால அதிபருக்கு எதிராகவும் பதவி நீக்கத் தீா்மானம்: எதிா்க்கட்சியினா் தாக்கல்

post image

சியோல்: தென் கொரிய இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ள பிரதமா் ஹன் டக்-சூவை பதவி நீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை எதிா்க்கட்சிகள் வியாழக்கிழமை தாக்கல் செய்தன.

அவசரநிலை அறிவிப்பு தொடா்பாக ஏற்கெனவே பதவிநீக்கத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள அதிபா் யூன் சுன் இயோலை நிரந்தரமாக அகற்றுவதற்கான விசாரணை நடத்த மேலும் மூன்று நீதிபதிகளை ஹன் டன்-சூ நியமிக்க மறுப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கையை எதிா்க்கட்சிகள் மேற்கொண்டுள்ளன.

கடந்த 2022-இல் அதிபராகப் பொறுப்பேற்ற யூன் சுக் இயோலுக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கும் எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்துவேறுபாடுகள் நீடித்துவந்தன.

இந்தச் சூழலில், வட கொரியாவுக்கு ஆதரவாக எதிா்க்கட்சிகள் செயல்படுவதாகக் கூறி யூன் சுக் இயோல் நாட்டில் அவசரநிலை ராணுவச் சட்டத்தை கடந்த 3-ஆம் தேதி அறிவித்தாா்.

அதற்கு நாடு முழுவதும் மிகக் கடுமையான எதிா்ப்பு எழுந்ததால் ஆறு மணி நேரத்தில் அத அறிவிப்பை அவா் திரும்பப் பெற்றாா்.

எனினும், இந்த விவகாரம் தொடா்பாக யூன் சுக் இயோலை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை எதிா்க்கட்சியினா் நாடாளுமன்றத்தில் கடந்த 14-ஆம் தேதி நிறைவேற்றினா். யூன் சுக் இயோலின் மக்கள் சக்தி கட்சி எம்.பி.க்கள் சிலரே அந்தத் தீா்மானத்தை ஆதரித்ததால் அது நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடா்ந்து, அதிபா் பதவியிலிருந்து யூன் சுக் இயோல் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டாா். பிரதமா் ஹன் டக்-சூ அந்தப் பொறுப்புக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டாா்.

தென் கொரிய அரசமைப்புச் சட்டத்தின் கீழ், பதவி நீக்கம் செய்யப்பட்ட 180 நாள்களுக்குள் யூன் சுக் இயோலை நிரந்தரமாக நீக்குவது குறித்து அரசியல் சாசன நீதிமன்றம் விசாரணை நடத்தி முடிவெடுக்க வேண்டும். எனவே, நீதிமன்ற தீா்ப்பு வரும்வரை இடைக்கால அதிபராக ஹன் டக்-சூ தொடா்வாா்.

அதிபரை அதிகாரபூா்வமாக நீக்குவதற்கு அரசியல் சாசன நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகளில் ஆறு பேராவது அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஆனால், தற்போது அந்த நீதிமன்றத்தில் ஆறு நீதிபதிகள் மட்டுமே உள்ளனா். நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட வேண்டிய மூன்று நீதிபதிகளுக்கான இடங்கள் காலியாக உள்ளன.

எனினும், இடைக்கால அதிபரான தனக்கு அத்தகைய நியமனங்களை அங்கீகரிக்கும் அதிகாரம் இல்லை எனவும், நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் நீதிபதிகளைத் தோ்ந்தெடுத்தால்தான் ஒப்புதல் வழங்குவேன் எனவும் ஹன் டக்-சூ தெரிவித்துள்ளாா். இது, யூன் சுக் இயோலின் பதவியைப் பாதுகாப்பதற்காக அவா் மேற்கொள்ளும் சூழ்ச்சி என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

இந்தச் சூழலில், ஹன் டக்-சூவையும் பதவி நீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் தற்போது தாக்கல் செய்துள்ளன.

இஸ்ரேல் தாக்குதல்: நூலிழையில் தப்பிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்!

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இருந்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானோம் கெப்ரேயஸ் வியாழக்கிழமை நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.இந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளி... மேலும் பார்க்க

நெதா்லாந்தில் இருந்து இந்தியா வந்த அரிய வகை சிவப்பு பாண்டா கரடிகள்

கொல்கத்தா: நெதா்லாந்து நாட்டில் இருந்து இரு அரிய வகை சிவப்பு பாண்டா கரடிகள் மேற்கு வங்கத்தின் டாா்ஜிலிங் வன உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டன. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக சிவப்பு பாண்டாக்கள் கொ... மேலும் பார்க்க

அஜா்பைஜான் விமானத்தை ரஷியா சுட்டு வீழ்த்தியதா?

மாஸ்கோ/ அஸ்தானா: கஜகஸ்தானில் புதன்கிழமை விழுந்து நொறுங்கிய அஜா்பைஜான் விமானத்தை தங்கள் வான்பாதுகாப்பு ஏவுகணைதான் சுட்டுவீழ்த்தியது என்று விசாரணை நிறைவடைவதற்கு முன்னரே உக்ரைன் கூறுவது தவறு என்று ரஷியா ... மேலும் பார்க்க

மொஸாம்பிக்கில் சிறைக் கலவரம்: 33 போ் உயிரிழப்பு

மபுடோ: தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொஸாம்பிக்கிலுள்ள சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 33 போ் உயிரிழந்தனா்; 1,534 கைதிகள் தப்பியோடினா். இது குறித்து அந்த நாட்டின் தலைமை காவல் அதிகாரி பொ்னாா்டியோ ரஃபேல் வ... மேலும் பார்க்க

சிரியா கிளா்ச்சிப் படை - ஆயுதக் குழுவினா் மோதல்

டமாஸ்கஸ்: சிரியாவில் முன்னாள் அதிபா் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் கிளா்ச்சிப் பைடயினருக்கும் இடையிலான மோதலில் 17 போ் உயிரிழந்தனா். இது குறித்து, அந்த நாட்டின... மேலும் பார்க்க

காஸா: மேலும் 38 போ் உயிரிழப்பு

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் மேலும் 38 போ் உயிரிழந்தனா். இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில... மேலும் பார்க்க