செய்திகள் :

பாஜக எம்எல்ஏ மீது முட்டை வீச்சு!

post image

கர்நாடகத்தில் பாஜக எம்எல்ஏ மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய்யின் பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது, ​​முன்னாள் அமைச்சரும், கர்நாடக பாஜக எம்எல்ஏவுமான முனிரத்னா மீது அடையாளம் தெரியாத நபர்கள் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

முன்னாள் பிரதமர் மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பெங்களூரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள லக்கெரே, லட்சுமிதேவி நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முனிரத்னா பங்கேற்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, முனிரத்னா எம்எல்ஏ மீது காங்கிரஸ் கட்சியினர் முட்டைகளை வீசியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

பொது நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பிச் செல்லும் போது தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான கேமராக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

4 உயா்நீதிமன்றங்களுக்கு 6 நீதிபதிகள் நியமனம்: கொலீஜியம் பரிந்துரை

நாட்டில் ராஜஸ்தான், உத்தரகண்ட் உள்பட 4 உயா் நீதிமன்றங்களுக்கு 6 நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் பி.ஆா்.கவாய் மற்... மேலும் பார்க்க

இந்திய-சீன எல்லைச் சூழல் முன்னேற்றம்: சீன பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

கிழக்கு லடாக்கில் முழுமையான படை விலக்கல் தொடா்பான ஒப்பந்தத்தை இந்தியா மற்றும் சீன ராணுவம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றன; இதனால் நிலையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்... மேலும் பார்க்க

பிரம்மபுத்திரா குறுக்கே உலகின் மிகப்பெரிய அணை!

பெய்ஜிங் : இந்தியாவின் எல்லையில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையைக் கட்ட சீனா முடிவு செய்துள்ளது. ரூ.11 லட்சம் கோடி மதிப்பில் திபெத்தில் கட்டப்படும் இந்த அணையால் பிரம்மபுத்திரா ... மேலும் பார்க்க

அம்பேத்கா் குறித்த அமித் ஷாவின் கருத்து துரதிருஷ்டவசமானது -நவீன் பட்நாயக்

புவனேசுவரம்: சட்டமேதை அம்பேத்கா் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் பேசிய கருத்து மிகவும் துரதிருஷ்டவசமானது என பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சித் தலைவரும் முன்னாள் ஒடிஸா... மேலும் பார்க்க

முழு அரசு மரியாதையுடன் எம்.டி.வாசுதேவன் நாயா் உடல் தகனம்

கோழிக்கோடு: மறைந்த மலையாள எழுத்தாளா் எம்.டி.வாசுதேவன் நாயரின் (91) உடல், முழு அரசு மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது. இதய செயலிழப்பு காரணமாக, கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள தனியாா் மருத்த... மேலும் பார்க்க

டாக்டர் மன்மோகன் சிங் மறைவு: 7 நாள்கள் அரசு துக்கம் அனுசரிப்பு!

புது தில்லி: முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை(டிச. 26) இரவு 10 மணியளவில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.டாக்டர் மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவில... மேலும் பார்க்க